லூலாவின் வெற்றி ஏகாதிபத்திய திட்டத்தை உடைத்துள்ளது பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
2 Nov 2026, 9:29 pm

லூலாவின் வெற்றி ஏகாதிபத்திய திட்டத்தை உடைத்துள்ளது பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

பிரேசிலியா,நவ.2-பிரேசில் தேர்தலில் லூலாவின் வெற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டத்தை உடைத்துள்ளது என அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகுறிப்பிட்டுள்ளது. பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 29 அன்று வெளியிட்ட அறிக்கையில் லூலாவின் வெற்றிபிரேசிலில் உள்ள தீவிர வலதுசாரிகளுக்கும், லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் இலக்குகளுக்கும் கிடைத்தபெருத்த அடி எனினும், வலதுசாரிகள் பழமைவாதிகளுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

பிரேசிலில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சமூக ஜனநாயக வாதியும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளருமான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலா மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். அமெரிக்க ஆதரவாளரும் தீவிர வலதுசாரி வேட்பாளருமான ஃபிளாவியோ பொல்சானரோ தேர்தலில்தோல்வியடைந்து அமெரிக்காவிற்குத் தப்பியோடியுள்ளார். இந்த அரசியல் மாற்றங்கள் குறித்து பிரேசிலின்கம்யூனிஸ்ட் கட்சி தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

லூலா தலைமையிலான சமூக ஜனநாயக அரசுக் கொள்கைகளை இக்கட்சி முழுமையாக ஏற்கவில்லை. எனினும் பாசிச மற்றும் ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்தவும் பிரேசிலின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் முதல் சுற்று தேர்தலில் லூலா பின்னடைவை சந்தித்த நிலையில் இரண்டாம் சுற்றில் ஃபிளாவியோ பொல்சானரோவை வீழ்த்த ஆதரவு கொடுத்தது. ஆதரித்தது மட்டுமல்லாமல் இரண்டாம் சுற்றுக்கு முன்னதாக களத்தில் மக்களை அணிதிரட்டி வாக்குகளை லூலாவிற்கு கிடைக்க செய்யும் வேலைகளையும் செய்தது. இதன் மூலம் பிரேசிலின் இறையாண்மையை பாதுகாப்பதிலும் அந்நாட்டை அமெரிக்காவின் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு காவு கொடுப்பதையும் குறைந்த பட்சம் தடுப்பதில் இக்கட்சி வெற்றி பெற்றது.

அக்கட்சியின் அறிக்கையில் பொல்சானரோ தோல்வியடைந்து விட்டார் என்பதற்காக பிரேசிலில் உள்ள பிற்போக்குச் சக்திகள், சதி முயற்சிகள் மற்றும் வெளிநாட்டு (ஏகாதிபத்திய) தலையீடுகள் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்பதாகாது. நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் பழமைவாதிகளின் ஆதிக்கம் உள்ளதால் அவர்களுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை.

பொல்சானரோ மீதான விசாரணையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருந்தும், பொல்சானரோ அமெரிக்காவிற்குத் தப்பியோடியுள்ளார். டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. இது பிரேசிலுக்கு எதிரான ஒரு அரசியல் அழுத்தமாக மாறும் வாய்ப்பு உள்ளது. அரசியல் பழிவாங்கல் என்ற பெயரில் பிரேசிலின் அரசு அமைப்புகளை முடக்கவும், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கவும் அமெரிக்கா முயற்சி செய்யும் என்றும் கூறியுள்ளது. தேர்தல் முடிவையும் தேசிய இறையாண்மை யையும் பாதுகாக்குமாறு அழைப்பு விடுத்த அக்கட்சி, நவபாசிசத்தைஎதிர்ப்பதுடன், நவ-தாராளவாதம், முதலாளித்துவச் சுரண்டல் கொள்கைகளுக்கு எதிராகவும் தொழிலாளர் வர்க்கம் போராட வேண்டும் என தனது அறிக்கையில் அக்கட்சிஅழைப்பு விடுத்துள்ளது.