மீண்டும் வென்றார் லூலா எமது நாடு யாருடைய கொல்லைப்புறமும் அல்ல; அமெ. ஏகாதிபத்தியத்தின் முகத்தில் அறைந்த பிரேசில் மக்கள்
27 Oct 2026, 3:13 pm

மீண்டும் வென்றார் லூலா எமது நாடு யாருடைய கொல்லைப்புறமும் அல்ல; அமெ. ஏகாதிபத்தியத்தின் முகத்தில் அறைந்த பிரேசில் மக்கள்

சாவோ பாலோ, அக்.26 –2026 அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரேசில் நேரப்படி சுமார் 9.15 மணி. சாவோ பாலோ நகரின் பவுலிஸ்டா அவென்யூவில் செஞ்சட்டை அணிந்து காத்திருந்த பல்லாயிரம் இதயங்கள் ஒரு கணம் துடிக்க மறந்தன. பிரேசிலின் தலைமைத் தேர்தல் ஆணையம் இறுதி எண்ணிக்கையை அறிவித்தது: லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா – 6 கோடியே42 லட்சத்து 56 ஆயிரத்து 232 வாக்குகள்; 51.79 சதவீதம். அடுத்த நொடியே அந்த அவென்யூ செங்கடலாய் ஆர்ப்பரித்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு “இவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது” என்று கார்ப்பரேட் ஊடகங்கள் எழுதிய -80 வயது முன்னாள் உலோகத் தொழிலாளி, லத்தீன் அமெரிக்காவின் உறுதிமிக்க இடதுசாரித் தலைவர்களில் ஒருவர்; தென்அமெரிக்காவின் மிகப்பெரிய நாட்டின் ஜனாதிபதியாக நான்காவது முறை தேர்வாகியிருக்கிறார்.

எண்கள் சொல்லும் பரபரப்பு

இத்தேர்தலில் டிரம்ப் ஆதரவு தீவிர வலதுசாரி வேட்பாளரும், ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் தண்டிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் போல்சான ரோவின்மகனுமான செனட்டர் ஃபிளாவி யோ போல்சானரோவுக்குக் கிடைத்தது 5 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரத்து 41 வாக்குகள் (48.21%). வித்தியாசம் 44 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள்.லூலாவின் இந்த வெற்றியின் மகத்துவம் புரிய, அக்டோபர் 4 முதல் சுற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அன்றுஃபிளாவியோ 47.03 சதவீதம் (5.61 கோடி வாக்குகள்), லூலா 45.16 சதவீதம் (5.39 கோடி வாக்குகள்). சுமார் 22 லட்சம் வாக்குகள்பின்தங்கியிருந்தார் லூலா. வெறும் மூன்றே வாரங்களில் அவர் கூடுதலாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார். 1989-இல் நேரடித் தேர்தல் மீண்டும் தொடங்கிய பிறகு, முதல் சுற்றில் இரண்டாம் இடம் பெற்றவர்இறுதிச் சுற்றில் வென்றது பிரேசில் வரலாற்றில் இதுவே முதல் முறை. முதல் சுற்றில் வாக்களிக்க வராமல் இருந்தவர்களில் சுமார் 30 லட்சம் பேர் இம்முறை வாக்குச்சாவடிக்கு வந்தனர்; வாக்குப்பதிவு சுமார் 81 சதவீத மாக உயர்ந்தது.

வீதிக்கு வந்த தலைமுறை

முதல் சுற்று முடிவு வந்தவுடன்பங்குச்சந்தைகள் கொண்டாடின. கருத்துக்கணிப்புகள் ஃபிளாவியோவையே முன்னணியில் காட்டின. ஆனால் மாணவர்களும், தொழிலாளர்களும், நடுத்தர வர்க்க மக்களும் அடுத்த நாள் காலையிலிருந்தே களத்தில் இறங்கினர். அக்டோபர் 11 அன்று பவுலிஸ்டாஅவென்யூ ஜனநாயகப் பேரணி”யால் நிரம்பி வழிந்தது – சுமார்10 லட்சம் பேர் திரண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சிவப்புக் கொடிகள்அலைமோதிய அந்த வீதி, அடுத்த மூன்று வார தேர்தல் களத்தின் போர்முரசாக மாறியது.

வாக்குச்சீட்டில் வந்தவார விடுமுறை

பிரேசில் தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகாலக் கனவுஒன்று இந்தத் தேர்தலின் திருப்புமுனையானது. வாரத்தில் ஆறு நாள் வேலை, ஒரு நாள் ஓய்வு எனும் “6x1” முறையை ஒழிக்கும் அரசியல் சாசனத் திருத்தத்தை அக்டோபர் 14 அன்று பிரேசில் செனட் 75–1 என்ற கணக்கில் நிறைவேற்றி யது. அதிகபட்ச வேலை நேரம் வாரத்திற்கு 44 மணியிலிருந்து 40 மணியாகக் குறைந்தது; ஊதியத்தில் ஒரு காசும் குறையாது; வாரம் இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய ஓய்வு உறுதி. 1988-க்குப் பிறகு அரசியல் சாசனம் வழியாக வேலை நேரம்குறைக்கப்படுவது இதுவே முதல் முறை. இதுவரை இந்தத் திட்டத்தை “சந்தர்ப்பவாதம்” என்று ஏளனம் செய்த ஃபிளாவியோவே, தொழிலாளர்களின் கோபத்துக்கு அஞ்சி ஆதரவாக வாக்களிக்க வேண்டியிருந்தது. “6 நாள் வேலை முறை ரத்துஇப்போது நிஜம்!” என்று லூலா அறிவித்தபோது, அது தேர்தல் வாக்குறுதி அல்ல – நிறைவேற்றப்பட்ட சாதனையாக மாறியது.

இரவு முழுக்க கொண்டாடிய மக்கள்

வெற்றி உறுதியானதும், நட்சத்திர வடிவ சிவப்புக் கண்ணாடி அணிந்த லூலா, நீண்ட காலமாகத் தன் மீது அன்பு பொழியும் பிரேசில் மக்களுக்கும், குறிப்பாக ஜனநாயகத்தைக் காக்க வீதிக்கு வந்த இளைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். “தாய்நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும், இல்லையேல் பிரேசிலுக்காக உயிர் துறப்போம்” என்ற பழைய முழக்கத்தை நினைவூட்டியஅவர், “இந்த நாடுயாருடைய கொல்லைப்புறமாக வும் இருக்க ஒப்புக்கொள்ளாது” என்று வாஷிங்டனுக்குப் பதிலடி தந்தார்.முடிவெடுப்பதில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்போம், டிஜிட்டல் தளங்கள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார். ரியோ-டி-ஜெனிரோவில் வாண வேடிக்கைகள் வானைச் சிவக்க வைத்தன; சாவோ பாலோ வீதிகளில் இரவு முழுக்க ஆடல், பாடல், “ஓலே,ஓலே, லூலா!” முழக்கம்.

மக்களின் குரல்

ரியோவில் சிறிய கடை நடத்தும் லூசியா டா சௌசா சொன்னார்: “லூலா மக்களில் ஒருவர்; ஏழ்மை என்றால் என்னவென்றுஅவருக்குத் தெரியும்.” பிரேசிலியாவைச் சேர்ந்த 43 வயது பத்திரிகை யாளர் ஆண்டர்சன் ஃபால்கோ, போல்சானரோ கும்பலின் திட்டம் ஏழைகளு க்கும், தொழிலாளிக்கும், பெண்களுக்கும், அமேசான் காட்டுக்கும் எதிரானது என்றார். லூலாவின் தொழிலாளர் கட்சி எம்.பி.ரெஜினால்டோ லோப்ஸ் – 6x1 ஒழிப்புத் திட்டத்தை 2019-இல் முதலில் முன்மொழிந்தவர் – “தீவிர வலதுசாரி என்பதுபாசிசம்தான், அது கருப்பினமக்களுக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்பதை பிரேசில் உலகுக்குச் சொல்லி யிருக்கிறது” என்றார்.

தோல்வியை ஏற்க மறுக்கும் வாரிசு

இதனிடையே, லூலாவின் வெற்றி என்ற தேர்தல்முடிவை “ஏற்பது சாத்தியமில்லை” என்று அறிவித்துள்ள ஃபிளாவியோ, தேர்தலையேரத்து செய்யக்கோரி நீதிமன்றம் செல்வதாகக் கூறியுள்ளார். வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டதை காரணம்காட்டுகிறார் – ஆனால் தனது ஆதரவுப் பகுதிகளுக்காக அதே நீட்டிப்பைக் கோரியவர் அவரே. முறைகேடு நடந்ததாக எந்த ஆதாரமும் அவர் முன்வைக்கவில்லை. 2022-இல் தோற்ற இவரது தந்தை ஜெயிர் போல்சான ரோவும் இதே நாடகத்தை நடத்தினார்; இன்று அவர் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக் குற்றவாளியாக, குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்ட னையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். தந்தைக்குப் பொது மன்னிப்பு பெறுவதே ஃபிளாவியோவின் வாக்குறுதி களில் ஒன்றாக இருந்தது.

உலகம் வாழ்த்துகிறது

“ஜனநாயகம் வாழ்க; பிரேசில் மக்கள் வென்றனர்” என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன் பாம் வாழ்த்தியுள்ளார். அமைதி, இறையாண்மை, சமூக நீதிப் பாதையின் தொடர்ச்சியை உறுதிசெய்யும் வரலாற்று வெற்றி இது என்று கியூப ஜனாதிபதி மிகேல் தியாஸ் கேனல்போற்றியுள்ளார். டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் தொடங்கிய பிறகு லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒவ்வொரு தேசியத் தேர்தலிலும் வலதுசாரிகளே வென்றுவந்த நிலையில், அந்த அலையைத் தடுத்து நிறுத்தியுள்ள முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் தொடர்கிறதுவெற்றி இனிது; ஆனால் பாதை எளிதல்ல. தற்சமயம் வலதுசாரிகளின் கையில் உள்ள நாடாளுமன்றம், பகைமை கொண்ட வாஷிங்டன், உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகள் – இவை அனைத்தையும் எதிர்கொள்ள வீதிகளில் பிரேசில் தொழிலாளர் கட்சியின் விழிப்பு தொடர வேண்டும். இந்தப் பின்னணியில் தான்2027 ஜனவரி 5 அன்று லூலாநான்காவது பதவிக் காலத்தைத் தொடங்குகிறார்.

பணபலமும், ஊடக பலமும், ஏகாதிபத்திய அழுத்தமும் ஒன்று சேர்ந்தாலும் ஒன்றுபட்ட மக்களை வெல்ல முடியாது என்பதை பிரேசில் மீண்டும் நிரூபித்துள்ளது. இது பிரேசிலின் வெற்றி மட்டுமல்ல; உலகெங்கும் இறையாண்மைக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் போராடும் உழைக்கும் மக்கள் அனை வருக்குமான நம்பிக்கைச் சுடர்.