வீதிகள் வென்ற தேசம்!
29 Oct 2026, 9:49 pm

வீதிகள் வென்ற தேசம்!

மூன்று வாரங்களுக்கு முன், லூலாவின் அரசியல் வாழ்வுக்கு ஊடகங்கள் இரங்கல் எழுதின. முதல் சுற்றில் 22 லட்சம் வாக்குகள் பின்தங்கியிருந்தார்; பங்குச்சந்தைகள் கொண்டாடின. ஆனால் அக்டோபர் 25 இரவு, 44 லட்சம் வாக்குகள் முன்னிலையில் நான்காவது முறையாக அவர் பிரேசில் ஜனாதிபதியானார். 66 லட்சம்வாக்குகளின் இந்தத் திருப்பம், அந்நாட்டின் நவீன வரலாற்றில் இதுவரை நிகழாதது.

இந்தத் திருப்பத்தை எழுதியது கருத்துக்கணிப்புகள் அல்ல. பவுலிஸ்டா அவென்யூவை நிரப்பிய பத்து லட்சம் பேர் எழுதினர். நிலமற்ற விவசாயத் தொழிலாளர் இயக்கமும், மாணவர்களும், தொழிற்சங்கங்களும் எழுதினர். வாரத்தில் ஆறு நாள் உழைப்பை ஒழித்து, ஊதியக் குறைப்பின்றி 40 மணி நேரவேலை வாரத்தை 3.7 கோடிப் பேருக்கு வென்றெடுத்த தொழிலாளி வர்க்கம் எழுதியது. அதை “சந்தர்ப்பவாதம்” என்று ஏளனம்செய்த ஃபிளாவியோவே இறுதியில் ஆதரித்து வாக்களிக்க வேண்டியிருந்தது. மெட்டாவின் அல்காரிதம்கள் லூலாவின் குரலை நெரித்தன; 84 லட்சம் பேர் கொண்ட “லூலாவின் படை” அதை உடைத்தது. தேர்தல் நாளில்உழைக்கும் மக்களின் பேருந்துகள் பணிமனைகளில் முடக்கப்பட்டன. அப்போதும் அவர்கள் பின்வாங்கவில்லை;வாக்குச்சாவடிகளை நோக்கித் திரண்டனர். வாக்குப்பதிவு இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. முதல் சுற்றில் வீட்டிலிருந்த30 லட்சம் பேர் இம்முறை வரிசையில் நின்றனர்.

டிரம்ப்பின் வரிகள், வாஷிங்டனின் பணம், “அமெரிக்காக்களின் கேடயம்” என்ற பெயரிலான கனிமக் கொள்ளைத் திட்டம் – அனைத்துக்கும் பிரேசில் தந்த பதில் ஒன்றே: “இந்த நாடு யாருடைய கொல்லைப்புறமும் அல்ல!” 580 நாள் சிறைவாசம் வளைக்க முடியாதஅந்த முன்னாள் உலோகத் தொழிலாளி, தனது 81-ஆவது பிறந்தநாளுக்கு மக்களிடமிருந்து பெற்றபரிசு இது. மெக்சிகோ முதல் மாட்ரிட் வரை, ஹவானா முதல் நியூயார்க் வரை உலகம் வாழ்த்துகிறது. டிரம்ப் முகாம் மட்டுமே முணுமுணுக்கிறது.

தோல்வியை ஏற்க மறுக்கும் ஃபிளாவியோ, 121 இடங்களுடன் நாடாளுமன்றத்தில் வலுவாக அமர்ந்திருக்கும் வலதுசாரி, முதலாளிகளுடன் சமரசம் செய்யும் பழைய பாதையின் எல்லைகள் – இவை அனைத்தும் இன்னும் களத்தில் உள்ளன. நிலச் சீர்திருத்தம், பொதுமுதலீடு, நிதி மூலதனத்தின் மீது மக்கள் கட்டுப்பாடு என்ற திசையில் அரசைச் செலுத்தும்வலிமையை, வீதிகளை நிரப்பிய இயக்கங்கள் பெற வேண்டும். வென்றெடுத்ததைக் காப்பதும் வீதிகளின் கடமையே.

பாசிசம் வீழ்த்த முடியாதது அல்ல என்பதைபிரேசில் நிரூபித்துவிட்டது. அதே போரை இந்த மண்ணில் நடத்திவரும் நமக்கு, இது தொலைதூரச் செய்தி அல்ல – நம் காதுகளில் ஒலிக்கும்போர்முரசு