மழைக்காடுகளின் காப்பாளருக்குப் பெருமழை வெற்றி - எஸ்.வி. வேணுகோபாலன்
27 Oct 2026, 9:23 pm

மழைக்காடுகளின் காப்பாளருக்குப் பெருமழை வெற்றி - எஸ்.வி. வேணுகோபாலன்

கடந்த நான்கு ஆண்டு களில் 20 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திய ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் தொழிலாளர் கட்சித் தலைவரும்பிரேசில் ஜனாதிபதியுமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா. இயற்கை வளங்களை அழிப்பதிலும், காட்டுப் பகுதிகளின் பூர்வகுடிகளை விரட்டுவதிலும், விதிமுறைகளைத் தளர்த்திச் சட்டவிரோதக் கும்பல்களின் வேட்டைக்கு வனங்களைத் திறந்துவிடுவதிலும் பெயர் பெற்றது போல்சானரோ குடும்பம். அதன் வாரிசும், டிரம்ப்பின் ஆசிபெற்றவருமான ஃபிளாவியோ போல்சானரோவை, அவரது தந்தை முந்தைய தேர்தலில் பெற்றதை விடவும் அதிகவாக்கு வித்தியாசத்தில் லூலா வீழ்த்தியுள்ளார். சுற்றுச்சூழல்ஆர்வலர்களும், பூர்வகுடிகளை நேசிப்போரும், எளிய மக்களும் கண்ணீர் மல்கக் கொண்டாடு கின்றனர்.

முதல் சுற்றில் 47% பெற்றுப் போல்சானரோ முன்னிலையில் இருந்தார். இரண்டாம் சுற்றில் 51%க்கும் அதிகமாகப் பெற்ற லூலா,அவரது ஆட்சிக் கனவை மட்டுமல்ல, பிரேசிலின் இறையாண்மையை ஒடுக்கத் துடித்த டிரம்ப்பின் கனவையும் தகர்த்தார். ஜெயிர் போல்சானரோ, லூலா ஆட்சியைக் கவிழ்க்கச் செய்த சதிக்காக விசாரிக்க ப்பட்டுக் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு, 27 ஆண்டு தண்டனையுடன் சிறையில் இருக்கிறார். அவர் மீது வழக்கு தொடுத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்ற டிரம்ப்பின் மிரட்டலை லூலா கருதவில்லை. கடும் வரிகள், பொரு ளாதாரத் தடை, பிரேசில் நீதித்துறையைக் கவிழ்க்க ஒரு மில்லியன் டாலர் நிதி என எல்லா முட்டுக் கட்டைகளையும் உடைத்துப் பெற்ற வெற்றி இது.

ஷூ பாலிஷிலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை

கல்வியறிவற்ற, மிக ஏழ்மையான விவசாயப் பெற்றோரின் எட்டுக் குழந்தைகளில் ஏழாவதாகப்பிறந்தவர் லூலா. படிப்பைத் தொடரஇயலாமல் ஷூ பாலிஷ் போட்டார், வேர்க்கடலை விற்றார்; பின்னர் உலோகத் தொழிற்சாலைத் தொழிலாளி ஆனார். ஒடுக்குமுறையும் குறைந்த கூலியும் உரிமை யின்மையும் நிலவிய அக்காலத்தில் ஒரு விபத்தில்விரலை இழந்தார். சக தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடி, 92% வாக்குகளுடன் 1975இல் தொழிற்சங்கத்தலைவ ரானார். சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகத் தொழிலாளர் கட்சியை உருவாக்கினார்; சிறைவாசம் அனு பவித்தார்; தொடர் தோல்விகளுக்கும் தளராமல் போராடி, 2002இல் தனது 57ஆம்வயதில் முதன்முறையாக ஜனாதிபதியானார். 2006 தேர்தலிலும் வென்று, மக்கள் வாழ்வில் ஏராளமான முன்னே ற்றங்களைக் கொண்டுவந்தார்.கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் அன்பைப் பெற்றவர் லூலா; கியூபாவின் இக்கட்டான நேரத்தில் அவர் செய்த உதவி களுக்காக, காஸ்ட்ரோ அவரை நேரில் அழைத்துநெகிழ்ச்சியோடு நன்றி பாராட்டினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை மக்களிடையே வளர்த்தவரை ஆளும்வர்க்கம் விட்டுவைக்குமா? ஊழல் புகாரில் 580 நாள் சிறையிலடைக்கப்பட்டார். குற்றச்சாட்டுகள் பொய் எனஉறுதியாகி, விடுதலையான பின் மீண்டும் மக்களுக்காகப் போராடி, 2022இல் மூன்றாம் முறை ஜனாதிபதியானார். இப்போது நான்காவது முறையாகத் தேர்வாகியுள்ளார்.

உள்ளங்கை அரசியல்ஃபிளாவியோ போல்சானரோ தனது உள்ளங்கையில் லூலா பெயரை எழுதி, அதன் கீழே “நான் ஊழல்வாதி”என்றெழுதி, படமெடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினார். அதுவே அவருக்கு எதிராகத் திரும்பியது. தூய்மைப்பணியாளர்கள், ஓட்டுநர்கள், தையல்காரர்கள், கொத்தனார்கள் என எல்லோரும் தம் பெயரையும் தொழிலையும்உள்ளங்கையில் எழுதிப் படமெடுத்துப் பதிலடி தந்தனர். சமூக விரோதிகளுடனான தொடர்பு ஏற்கெனவேஅம்பலமாகியிருந்த போல்சானரோ மேலும் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவர் வென்றால் அமேசான்காடுகள் நினைவில் மட்டுமே எஞ்சும் என இயற்கை ஆர்வலர்கள் அஞ்சி, அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தனர்.

முதல் சுற்றுப் பின்னடைவு முற்போக்கு சக்திகளிடம் ஏற்படுத்தியஏமாற்றமே, இரண்டாம் சுற்றில்வெற்றிக்கான கடும் முயற்சி களுக்குத் தூண்டுதலானது. லூலா ஏறத்தாழ ஒரு கோடி கூடுதல் வாக்குகள் பெற்றார்; எதிர் வேட்பாளரின் பகுதிகளிலும் வாக்குகள் கூடின. முதல் சுற்றில் வாக்களிக்காத வர்களில் 2% பேரை வாக்குச்சாவ டிக்கு வரவைத்தது தொழிலாளர் கட்சி. நீதிமன்றத்தலையீட்டால், வனப்பகுதிப் பூர்வகுடிகளும், சென்றடைய முடியாத பகுதி மக்க ளும் படகு, விமானம் உள்ளிட்டஇலவசப் பயணம், உணவு ஏற்பாடுகளு டன் வாக்களிக்க முடிந்தது முக்கிய மானது.

கண்ணீரும் சிவப்புக் கண்ணாடியும்

“என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்; உங்கள் பெருந்தன்மைக்கும் அன்புக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே கண்ணீர் மல்கப் பேசினார் லூலா. இயற்கையைக் காக்கும் அவரது அர்ப்பணிப்புக்கு இயற்கையும் நன்றி காட்டியதுதான் வியப்பு: போல்சானரோ ஆதர வாளர்கள் வாழும் பகுதிகளில் பெய்த பெருமழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டு, அவருக்கான வாக்குகளில் சிறிது சரிவு ஏற்பட்டிருக்கக் கூடும் என்கின்றன மேற்கத்திய ஏடுகள்.

வெற்றி உறுதியானதும் தொழி லாளர் கட்சிக் கொடியின் நிறமான சிவப்பில் கண்ணாடி அணிந்து நன்றி தெரிவித்தார் லூலா. இந்தத் தேர்தல் காலத்தில்தான் தனது முதல் ஸ்மார்ட்ஃபோனை வாங்கினார். “நானும் செல்ஃபி ராஜாதான், இணையம் பயன்படுத்துபவன்தான்” என்று இளைஞர்களிடம் உரத்துப் பேசினார். முதல் சுற்றில் தொழி லாளி வர்க்க வாக்குகள் அதிகம் பெற்ற அவர், இரண்டாம் சுற்றில் சமூக ஊடகங்கள் வழியாக இளைய தலைமுறையையும் நெருங்கினார். “இது பிரேசிலின் இறையாண்மைக்கான வாக்கு; நமது மண் நமக்கானது, யாருக்கும் அடிமையாகிவிடக் கூடாது” என்றும் முழங்கினார்.

அட்லாண்டிக் பெருங்கடலுக்குத் தன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அண்மையில் பேசினார் டிரம்ப். அவரது ஆணவத்தை அதே பெருங்கடலில் சற்றே கரைத்து விட்டனர் பிரேசில் மக்கள். வலது சாரி அராஜக அரசியலைப் பின்னுக்குத் தள்ளி இடதுசாரி அணி பெற்றுள்ள இந்த வெற்றி, உலக இடதுசாரிகளுக்கு மாபெரும் நம்பிக்கை ஒளி. பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கும் இது நிறையச் செய்திகளைச் சொல்கிறது.