தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

5 Jun 2026, 1:21 am
தீக்கதிர்  உலக செய்திகள்

யாருக்கும் தலைவணங்க மாட்டோம் : பிரேசில் ஜனாதிபதி லூலா பேச்சு

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பிரேசில் ஒருபோதும் பணியாது. அமெரிக்கா எடுத்துள்ள புதிய வர்த்தக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை பிரேசில் உறுதியுடன் எதிர்க்கும் என பிரேசில் ஜனாதிபதி லூலா தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் பிரேசில் நாட்டுப் பொருட்கள் மீது 25 சதவிகித கூடுதல் வரி விதிக்கப்போவதாக அறிவித்த நிலையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். பெரிய உலக நாடுகளுக்கு முன்னால் பிரேசில் இனி ஒருபோதும் ‘தெரு நாய்’ போன்ற கொள்கையைக் கடைப்பிடிக்காது என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இங்கு யாரும் எதற்கும் பயப்படத் தேவையில்லை என பேசியுள்ளார்.

2.4 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி பற்றாக்குறை

ஆப்பிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடியே 40 லட்சம் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது என ஐ.நா அவையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் புதன்கிழமை தெரிவித்துள்ளார். இப்பிராந்தியத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்களின் தொடர் தாக்குதலால் நிலைமை மோசமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றத்தால் இப்பிராந்தியம் மிக வேகமாக வெப்பமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

9 பாலஸ்தீனர்கள் கொலை : இஸ்ரேல் ராணுவம் வெறிச்செயல்

காசா நகரில் பாலஸ்தீனர்கள் தங்கி இருந்த பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது. இந்தத்தாக்குதலில் 9 பாலஸ்தீனர்கள் படுகொலையாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். காசா நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டடங்களை அழிக்க வேண்டும் என அப்பகுதி முழுவதும் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசியது குறிப்பிடத்தக்கது.

எபோலா தடுப்புப் பணிகள் தீவிரம் : சுகாதார அமைப்பு தகவல்

காங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்புப் பணிகளும் தற்போது வேகம் எடுத்துள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் சமீபத்தில் அந்நாட்டிற்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டார். அவர் தெரிவித்த தகவல்படி இதுவரை 344 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதியோர் இல்லத்தில் தீ : இலங்கையில் 12 பேர் பலி

இலங்கையில் முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் விரைந்து செயல்பட்ட மீட்புக்குழுவினர், அந்த இல்லத்தில் இருந்த 44 பேரை எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்திற்குப் பிறகு அங்கிருந்த 3 பேரைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேட்டோ மாநாட்டுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு!

அங்காரா, ஜூன் 4- துருக்கி தலைநகர் அங்காராவில் ஜூலை 5 அன்று நேட்டோ (NATO) அமைப்பின் உச்சிமாநாடு நடை பெறவுள்ளது. இம்மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரிய எதிர்ப்புப் பேரணி நடத்த துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி (TKP) அழைப்பு விடுத்துள்ளது. “நேட்டோ என்றால் மரணமும் அவ மானமும்; அமைதி, சுதந்திரம் மற்றும் சோசலிசம் வாழ்க!” என்ற முழக்கத்தின் கீழ் இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது. நேட்டோ உச்சிமாநாடு துவங்குவதற்கு முன்பாகவே மக்கள் பெருந்திரளாக போராட்டத்தில் பங்கேற்று, ஏகாதி பத்தியவாதிகளுக்கு பலத்த எச்சரிக்கை யை விடுக்க வேண்டும் என்று கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. துருக்கி தலைநகரான அங்காரா வில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெ றும் நிலையில் அந்நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை அந்நாட்டு அரசு முடக்கத் தயாராகி வருகிறது என கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில் நேட்டோ அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே, அது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எதிரான போர், ஆக்கிரமிப்பு மற்றும் அழி வுகளை உருவாக்கும் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. நேட்டோவின் ஏகாதிபத்திய திட்டங்களையும், அதற் காக துருக்கியை அவர்கள் பயன்படுத்த நினைப்பதையும் நாம் தடுக்க வேண் டும். இந்த உச்சிமாநாடு, துருக்கியை போருக்குள்ளும் பேரழிவுகளுக்குள் ளும் இன்னும் அதிக வேகமாக இழுத்துச் செல்வதற்கான ஒரு புதிய கட்டமாகும் என குறிப்பிட்டுள்ளது. ஜூலை 5 அன்று நடைபெறவுள்ள இந்த மாபெரும் எழுச்சிப் போராட்டத்தில் அனைத்து தேசப்பற்றாளர்களும் கலந்துகொள்ள வேண்டும் என துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள் ளது. துருக்கியும், உலக மக்களும் தங்களைக் காத்துக்கொள்ள யாரும் இல்லாத ஆதரவற்றவர்கள் அல்ல என் பதை நேட்டோ ஏகாதிபத்தியவாதிக ளுக்கு இந்தப் பேரணியின் மூலம் துணிச்சலோடு காட்டப்போவதாகவும் அக்கட்சி பிரகடனப்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.