லூலாவும் எதிர்ப்புரட்சிக் காலத்தின் கசப்பான உண்மைகளும் - பேராசிரியர் விஜய் பிரசாத்
43 minutes before

லூலாவும் எதிர்ப்புரட்சிக் காலத்தின்கசப்பான உண்மைகளும்

லூலா என்று அழைக்கப்படும் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, 1989 முதல் எட்டு முறை பிரேசில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு, நான்கு முறை (2002, 2006, 2022, 2026) வென்றிருக் கிறார் – கடைசியாக எண்பது வயதில். 1969-இல் அவர்உலோகத் தொழிலாளர் சங்கத் தலைமைக்குத் தேர்வானதுமுதல் இந்த வெற்றி வரை, பிரேசில் ராணுவ சர்வாதிகா ரத்தின் கீழோ (1964–85), பழைய ஆளும் வர்க்கங்களும்அவர்களின் வாஷிங்டன் கூட்டாளிகளும் மேலாதிக்கம் செலுத்தும் ஜனநாயக அமைப்பின் கீழோதான்இருந்திருக் கிறது. இந்த அதிகாரச் சமநிலையே லூலாவின் சாதனை களுக்கு ‘எல்லை’ வகுத்தது.“போரா லூலா” – “வாருங்கள், லூலா” – இதுவே சமீபத்தில் நடந்த தேர்தல் முழக்கம். அது மாபெரும் வெற்றி யைத்தந்தது. ஆனால் பதவியை வெல்வது மட்டுமே நிதி மூலதனத்தின் அதிகாரத்தைக் கரைக்காது; நிலச்சீர்திருத்தத்தை நிறைவேற்றாது; நிரந்தரமற்ற வேலையை ஒழிக்காது. லூலாவின் வெற்றி போராடிப் பெற்றஉரிமை களைப் பாதுகாக்கிறது; ஆனால் எதிர்ப்புரட்சிக் காலத்தின் கடினமான களத்தை மாற்றிவிடவில்லை.

இது ‘எதிர்ப்புரட்சிக்’ காலம்

1990களின் தொடக்கம் முதல், நாம் “நவதாராளமயம்”, “உலகமயம்” என்று மென்மையாகப் பெயரிட்ட காலத்தில், எதிர்ப்புரட்சி சக்திகள் உலக அளவில் மேலாதிக்கம் பெற்றன. 1980களின் கடன் நெருக்கடியும், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் உலக அதிகாரச் சமநிலையை மாற்றின.சோசலிச, தொழிலாளி வர்க்க, தேசிய விடுதலைப் போராட்டங்களின் வெற்றிகளைத் திட்டமிட்டுப் பின்னுக்குத்தள்ளுவதே எதிர்ப்புரட்சி. 1995-இல் உலக வர்த்தக அமைப்புஉருவாகி, பெரும் நிறுவனங்களுக்குச் சாதகமான பொதுவிதிகளைச் சமமற்ற நாடுகள் மீது திணித்தது; மூலதனக் கட்டுப்பாடுகள் தளர்ந்தன. அமெரிக்க நிதி நிறுவனமானபிளாக்ராக் நிர்வகிக்கும் சொத்து 1999-இல் 165 பில்லியன் டாலரிலிருந்து 2026 செப்டம்பரில் 15.5 டிரில்லியன்டாலராக – ஏறத்தாழ 94 மடங்கு – பெருகியது. கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியின் சொத்து இதே காலத்தில் ஏழுமடங்கு உயர்ந்து 1.81 டிரில்லியன் டாலரானது.

உலகெங்கிலும் சமூக ஜனநாயகக் கட்சிகள் இந்தத் திருப்பத்துக்கு இணங்கிப் போயின. சோவியத் வீழ்ச்சிக்குப் பின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் கலைந்தன அல்லது வீழ்ந்தன. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவு

(1994), வெனிசுலாவின் பொலிவாரிய இயக்கம் (1998), நேபாள மன்னராட்சி ஒழிப்பு (2008) போன்ற முன்னேற்றங்கள் நிகழ்ந்தாலும், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகள் பெரும்பாலும் தப்பின. இந்நிலையில் இடதுசாரிகளின் திட்டங்கள் மூன்று களங்களில் வளர்ந்தன: ஜனநாயகப் பாதுகாப்பு, சமூக நல விரிவாக்கம், இறையாண்மை வளர்ச்சிக்கு இடமளிக்கும் பன்முகஅமைப்புகள்.

ஜனநாயகம்

இதன் ஒரு பகுதியாகத்தான் பிரேசிலில் 1978–80 வேலைநிறுத்தங்களும், லூலா முன்னின்று 1980-இல்

உருவாக்கிய தொழிலாளர் கட்சியும் ராணுவ சர்வாதி காரத்தை பலவீனப்படுத்தின. 1984-இல் நிலமற்ற தொழி

லாளர் இயக்கம் (MST) உருவானது. பிரேசிலில் லூலா

வுக்குப் பின் தொழிலாளர் கட்சி அரசின் ஜனாதிபதியாக வந்த தில்மா ரூசெப் பதவி நீக்கம் (2016) போன்ற சட்டப் போர்கள் முதல், 2026 ஜனவரியில் வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதலும் ஜனாதிபதி மதுரோ கடத்தலும் போன்ற ராணுவத் தலையீடுகள் வரை ஜனநாயகம் பல வழிகளில் தாக்கப்படுகிறது. இவை போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள இத்தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்த “லூலாவின் படை” வாட்ஸ்அப் சேனல் உள்ளிட்டவை பிரச்சாரத்தில் பங்காற்றின. ஆனால் தேர்தல்

களுக்கு இடையிலும் மக்கள் இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்; சமூக ஊடகங்கள், மத சமூகங்கள் போன்ற தீவிர வலதுசாரிகளின் கோட்டைகளிலும் கருத்துப் போர் நடத்த வேண்டும்.

சமூக நலம்

பிரேசில் புள்ளியியல் அமைப்பின்படி, வறுமை 2023-இல் 27.3 சதவீதத்திலிருந்து 2024-இல் 23.1 சதவீதமாகக் குறைந்தது – தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக. இந்த எண்களுக்குப் பின்னால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடிந்த மக்களும், பாதுகாப்பு பெற்ற குழந்தைகளும், கண்ணியத்தை மீட்ட குடும்பங்களும் இருக்கிறார்கள். லூலாவின் முந்தைய மூன்று ஆட்சிகளும் குறிப்பிடத்தக்க சமூக முன்னேற்றங்களைச் சாதித்தன; ஆனால் அவற்றைச் சாத்தியமாக்கிய அரசியல் சமரசங்களே அவற்றுக்கு எல்லையும் வகுத்தன. பொருளாதார அதிகாரத்தை மாற்றாத மறுபகிர்வு வரம்புக்குட்பட்டது. தொழில்மய மிழப்பும், உள்கட்டமைப்பில் குறைந்த முதலீடும் தொடர்வதால் நலத்திட்டங்கள் செல்வந்தர்களுடனான பேரங் களுக்குப் பலியாகின்றன. நிரந்தரமற்ற வேலையின் அவமானத்தை, புலம்பெயர்ந்தோர், பெண்கள், சிறுபான்மை யினர், இடதுசாரிகள் மீதான வெறுப்பாகத் தீவிரவலதுசா ரிகள் மாற்றுகின்றனர்.

தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு

தெற்கு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு லூலா குரல் கொடுத்தார்: தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (2008), பிரிக்ஸ் (2009), போன்றவை “பன்முகத்தன்மைக்கான கூட்டாளிகள்” முயற்சி. பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கிக்கு இப்போது தில்மா ரூசெப் தலைமைதாங்குகிறார். மேற்குலகுக்கும் தெற்குக்கும் இடையே பாலமாக நின்று, “துடிப்பான, பெருமிதமான வெளியுறவுக்கொள்கை” மூலம் பன்முக அமைப்புகளைத் தானே வடிவமைப்பதே பிரேசிலின் அணுகுமுறை. இவை இறையாண்மைக்கான வெளியைக் காக்கின்றன; ஆனால் சமூக மாற்றத் திட்டம் அல்ல.

லட்சக்கணக்கான லூலாக்கள் வேண்டும்

இந்தத் தற்காப்புத் திட்டங்களே முழு அரசியல் எல்லையாக இறுகிவிட்டால் ஆபத்து. மக்களின் விரக்தியை, செல்வந்தர்களை வலுப்படுத்தும் “போலிக் கலகம்” கைப்பற்றும் – இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட நடந்தது அதுதான். விடுதலை சாத்தியமற்றது என்று ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கற்பிப்பதன் மூலமே எதிர்ப்புரட்சி தன்னை மறுஉற்பத்தி செய்கிறது. லூலாவின் வெற்றி கோடிக்கணக்கில் திரண்ட உழைக்கும் மக்களின் சாதனை. ஆனால், எதிர்காலம் ஒரு தலைவரின் அசாதாரணத் திறனைச் சார்ந்திருக்க முடியாது. அடுத்த லூலா அல்ல; லட்சக்கணக்கான லூலாக்களைஉருவாக்கும் இடதுசாரி இயக்கமே தேவை.