தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குண்டுச் சத்தங்களுக்கு நடுவே பிறந்த கனவு

1 hour before
குண்டுச் சத்தங்களுக்கு நடுவே பிறந்த கனவு

குண்டுச் சத்தங்களுக்கு நடுவே பிறந்த கனவு

மத்திய ஐரோப்பாவின் குரோசியா நாட்டில் உள்ள மாட்ரிச் கிராமத்தில் 1985இல் பிறந்தார் லூகா மோட்ரிக். உள்நாட்டுப் போரின் போது இவரது தாத்தாவை செர்பியப் படைகள் சுட்டுக் கொன்றன; இவர்களது வீடும் தீக்கிரையா னது. 6 வயதே நிரம்பிய மோட்ரிக், குடும்பத்துடன் சதார் நக ருக்கு அகதியாக ஓடினார். மின்சாரமோ, குடிநீரோ இல்லாத அந்த அகதி முகாமில், குண்டுச் சத்தங்களுக்கு நடுவே கார் நிறுத்துமிடத்தில் பந்தை உதைத்துத் தனது கால்பந்துப் பயணத்தைத் தொடங்கினார்.

வரலாற்றின் தங்கப் பக்கங்கள்

2012இல் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்த மோட்ரிக், அந்த அணியின் இதயமாக மாறி அதிக கோப்பைகளை வென்று தந்தார். மெஸ்ஸி - ரொனால்டோவின் பத்தாண்டு கால ஆதிக்கத்தை உடைத்து, 2018ஆம் ஆண்டின் ‘பாலன் டி’ஆர்’ விருதைக் கைப்பற்றினார். இவரது தலைமையில் 2018 உலகக்கோப்பையில் குரோசியா முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி ‘கோல்டன் பால்’ விருதை வென்றது. 2022 உலகக்கோப்பையிலும் பிரேசிலை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார்.

2026 உலகக்கோப்பையும் பிரியாவிடையும்

40 வயதைத் தாண்டியும் மைதானத்தை விட்டு விலகாத மோட்ரிக், 2026 உலகக்கோப்பையில் தனது 5-வது தொ டரில் விளையாடினார். டொரோண்டோ மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், தனது நீண்டகாலத் தோழர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியை குரோசியா எதிர்கொண்டது. இதில் 2-1 என்ற கணக்கில் குரோசியா தோற்றுத் தொடரிலிருந்து வெளியேறியது. ஆட்டம் முடிந்த தும் ரொனால்டோவும் மோட்ரிக்கும் மைதானத்தின் மத்தி யில் நீண்ட நேரம் கட்டியணைத்துக் கொண்டது கால்பந்து உலகையே உணர்ச்சிவசப்படுத்தியது.

இப்போட்டியின் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் (23 போட்டிகள்) விளையாடிய இத்தாலி யின் பாலோ மால்டினியின் சாதனையை மோட்ரிக் சமன் செய்தார். அகதி முகாமில் தொடங்கி, குரோசியாவின் ‘ஆண் டின் சிறந்த வீரர்’ விருதை 14 முறை வென்ற “மிட்பீல்டின் மாஸ்டர்” லூகா மோட்ரிக்கின் விடாமுயற்சி, உலகெங்கும் உள்ள இளம் வீரர்களுக்கு என்றும் ஒரு பாடப்புத்தகம். சி.ஸ்ரீராமுலு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.