தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

லக்னோ சரோஜினி நகர் மதர்சன் ஆலை வேலைநிறுத்தம் ‘அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல’ : உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

26 May 2026, 9:39 pm
லக்னோ சரோஜினி நகர் மதர்சன் ஆலை வேலைநிறுத்தம் ‘அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல’ :  உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

லக்னோ சரோஜினி நகர் மதர்சன் ஆலை வேலைநிறுத்தம்

‘அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல’ : உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

வேலைநிறுத்தம் 36

லக்னோ, மே 26- உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மாவட்ட தொழில் மண்டலமான சரோ ஜினி நகரில் அமைந்துள்ள மதர்சன் ஆட்டோமொபைல் ஆலையில், கடுமையான பணவீக்கத்திற்கு எதிரான குறைந்தபட்ச ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம், அம்மாநிலத்தின் தொழி லாளர் வர்க்க எழுச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (NSA) ஏவி தொழிலாளர் தலைவர்களை ஒடுக்க முனைந்த உத்தரப் பிரதேச கார்ப்ப ரேட்-அரசு கூட்டணியின் சூழ்ச்சியை முறியடித்து, தொழிலாளர்கள் தங்க ளின் உரிமைகளை வென்றெடுத்துள்ளனர்.

மாருதி 800 கார்களுக்கான ஒயரிங் ஹார்னஸ் (Wiring Harnesses) தயாரி ப்பில் தொடங்கி, தற்போது கனரக வணிக வாகனப் பிரிவில் இந்தியாவின் ஏகபோக விநியோகஸ்தராக விளங் கும் மதர்சன் நிறுவனத்தின் சரோஜினி நகர் ஆலைகளில், கடந்த ஏப்ரல் மாத மத்தியில் தொழிலாளர்களின் மாபெ ரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது. நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 1,500 முதல் 2,500 தொழிலாளர்கள் பணி யாற்றும் இந்த ஆலையில், வெறும் சொற்பக் கூலிக்காக 12 மணி நேரக் கடுமையான உழைப்புச் சுரண்டல் தடையின்றி அரங்கேறி வந்தது.

ஏப்ரல் 1 ‘கருப்பு தினம்’: வெடித்தது வர்க்கப் போராட்டம்

கடந்த மார்ச் மாதத்தில் அண்டை மாநிலமான ஹரியானாவில் குறைந்த பட்ச ஊதியம் 35 சதவீதம் உயர்த்தப் பட்டது, லக்னோ தொழிலாளர்கள் மத்தி யில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி யது. மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில், ஏப்ரல் 1 அன்று நாடு தழுவிய அளவில் அனுசரிக்கப்பட்ட ‘கருப்பு தினம்’ (Black Day) சரோஜினி நகர் ஆலைத் தொழிலாளர்களின் வர்க்க

உணர்வைத் தட்டியெழுப்பியது.

தொழிலாளர் சட்டத் தொகுப்பு களுக்கு எதிராக கைகளில் கருப்புப் பட்டை அணிந்து முழக்கமிட்ட தொழி லாளர்கள், ‘மஜ்தூர் பிகுல் தஸ்தா’ (Mazdoor Bigul Dasta) போன்ற அடிமட்டத் தொழிலாளர் அமைப்புகளு டன் இணைந்து ‘X Storm’ என்ற வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் டிஜிட்டல் கியூஆர் கோடுகள் மூலம் ரகசியமாகத் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்ட னர். இதன் விளைவாக, ஏப்ரல் 13 அன்று தொழிலாளர்கள் ஆலைகளி லிருந்து ஒட்டுமொத்தமாக வெளி நடப்பு செய்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.

கார்ப்பரேட்-அரசு கூட்டணியின் அடக்குமுறையும் உச்சநீதிமன்றத்தின் சாட்டையடியும்

அமைதியான முறையில் நடை பெற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்ட த்தை ஒடுக்க நினைத்த உத்தரப் பிரதேச காவல் துறை மற்றும் பாஜக மாநில அரசு, ஏப்ரல் 19 அன்று லக்னோவில் ‘மஜ்தூர் பிகுல் தஸ்தா’ அமைப்பாளர் கள், சுயேச்சையான பத்திரிகையா ளர்கள் மற்றும் தில்லி பல்கலைக்கழக மாணவர்களைக் கொடூரமாகக் கைது செய்தது. தொழிலாளர்களின் நியாய மான கூலி உயர்வுப் போராட்டத்தை “சர்வதேச நிதி உதவி பெற்ற நக்சல் சதி” என்றும், “பாகிஸ்தான் பின்னணி கொண்டது” என்றும் கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவாகக் குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டன. மேலும், கைதான வர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) பாய்ந்தது. கைது செய்யப்பட்டவர்கள் காவல் துறையினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, மே 15 அன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, உத்தரப் பிரதேச மாநில அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும், தங்களின் வாழ்வாதாரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகளை மட்டுமே அவர்கள் கோருகிறார்கள் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இடதுசாரி சித்தாந்தத்தை ஆதரிப்பது ஒருவரை குற்றவாளியாக்காது என்றும் உச்சநீதிமன்றம் மிகத் தெளி வாக உத்தரவிட்டது.

முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் ஊதிய உயர்வும்

தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தாலும், உற்பத்தி முடக்கத்தாலும் வேறு வழியின்றி இறங்கிவந்த உத்தரப் பிரதேச தொழி லாளர் துறை, ஏப்ரல் 15 அன்று சரோஜினி நகரில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை யை நடத்தியது. துணைப் பிரிவு மாஜிஸ் திரேட் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், 12 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் அடங் கிய 20 பேர் கொண்ட தொழிலாளர் குழு, ஆலை நிர்வாகத்துடன்நேரடியாக தலையிட்டு, 15 சதவீத ஊதிய உயர்வை நிலைநாட்டியது. இதன் மூலம் பகுதித் திறன் தொழிலாளர்களுக்கு 13,006 ரூபாயாகவும், திறனுள்ள தொழி லாளர்களுக்கு 16,025 ரூபாயாகவும் குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்பட்டது.

தீராத குறைகளும் தொடரும் வர்க்கப் போராட்டமும்

இந்த ஊதிய உயர்வு தற்காலிக மாக உற்பத்தியைத் தொடங்க வழி வகுத்தாலும், தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று சிஐடியு மற்றும் மாசா (MASA) போன்ற இடது சாரி தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியு ள்ளன. தொழிலாளர்கள் தரப்பில் 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை அடிப்படை வாழ்வாதார ஊதி யம் கோரப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ளது வெறும் 13,006 முதல் 16,025 ரூபாய் மட்டுமே ஆகும். இது தற்போதைய கடுமையான பண வீக்கத்திற்கு சற்றும் போதுமானதல்ல என்று தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், உழைப்பிற்கு ஏற்ற இரட்டை வீத கூடுதல் நேர ஊதியம் (Double-rate Overtime Pay) இன்னும் சட்டப்பூர்வமாக அமல்படுத்தப்பட வில்லை. அத்துடன், ஆலைகளில் நிலவும் பிரதான உழைப்புச் சுரண்டல் வடிவமான மூன்றாம் தரப்பு ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிக்கப்படாமல் தொடர்வதால், பெரும்பாலான தொழி லாளர்கள் எவ்வித பணிப்பாதுகாப்பும் இல்லாத தற்காலிகப்பணியாளர்களா கவே நீடிக்கின்றனர். கார்ப்பரேட் நிறு வனங்களின் அதீத லாபவெறிக்காக உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்க நினை க்கும் அரசின் அடக்குமுறைகளுக்கு, மதர்சன் ஆலைத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் ஒரு தகுந்த பாடமாக அமைந்துள்ளது. தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.