முந்தய பக்கம்

லக்னோ பயிற்சி மைய தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு

8 hours before
லக்னோ பயிற்சி மைய தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் பயிற்சி மைய தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உஷா மேத்தா மார்க் சாலையில் உள்ள மூன்று மாடி வணிகக் கட்டடத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தில் கோச்சிங் சென்டர், லைப்ரரி மற்றும் கேமிங் ஜோன் இயங்கி வந்துள்ளது. கட்டடத்தில் இருந்து சில மாணவர்கள் உயிருக்கு பயந்து கீழே குதித்துத்தனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வழக்கில் கட்டட உரிமையாளர்களான ராம் கிருஷ்ணா உபாத்யாய், வீரேந்திர பிரசாத் சுக்லா, துஷக் கிருஷ்ணா ஜெய்ஸ்வால் மற்றும் சுரேஷ் குமார் சாஹூ ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram