லக்னோ தீ விபத்து - 12 பேர் உயிரிழப்பு
yesterday
<p>உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>உத்தரப் பிரதேசத்தின் லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உஷா மேத்தா மார்க் சாலையில் உள்ள மூன்று மாடி வணிகக் கட்டடத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தில் கோச்சிங் சென்டர், லைப்ரரி மற்றும் கேமிங் ஜோன் இயங்கி வந்துள்ளது. கட்டடத்தில் இருந்து சில மாணவர்கள் உயிருக்கு பயந்து கீழே குதித்துத்தனர். இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி மையத்தில் சிக்கியுள்ள மேலும் சில மாணவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. </p>
