இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்
13 Jun 2026, 9:10 pm

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக (Chief of the Army Staff - COAS), தற்போது துணைத் தளபதியாகப் பணி யாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்தை ஒன்றிய அரசு நிய மித்துள்ளது.தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் பணி நிறைவு பெற்று ஓய்வு பெறுகிறார். அன்றைய தினம் (ஜூன் 30) பிற்பகலில் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

40 ஆண்டு கால ராணுவப் பணி

லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடெமி, டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதெமியின் முன்னாள் மாண வர் ஆவார். 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவத்தின் ‘ஆர்மர்டு கோர்ப்ஸ்’ பிரிவில் தனது பணியைத் தொடங்கிய அவர், கடந்த 40 ஆண்டு கால ராணுவ சேவையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித் துள்ளார். 1995-1996 காலகட்டத்தில் அங்கோலாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிக்கான ஆபரேஷன்ஸ் அதிகாரியாக வும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.