ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் சிலிண்டர் மானியம் ரத்தாகும்?
13 May 2026, 1:59 am

ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் சிலிண்டர் மானியம் ரத்தாகும்?

சென்னை, மே 12- ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள சமையல் எரிவாயு நுகர்வோருக்கான மானியத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

அரசு அனுப்பும் குறுஞ்செய்தி மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவின்படி, வருமான வரி கணக்குகளின் அடிப்படையில் குறிப்பிட்ட வருமான வரம்பைத் தாண்டிய நுகர்வோருக்குத் தற்போது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அதில், “உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் 7 நாட்களுக்குள் 1800-2333-555 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இல்லையெனில் மானியம் நிறுத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிருப்தி தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.24.50 மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது.

இந்தச் சிறிய தொகைக்காகத் தனிநபரின் வருமான வரி விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்வது ‘தனியுரிமை மீறல்’என நுகர்வோர் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்குக்கூடப் பத்தாத இந்த மானியத் தொகையை ரத்து செய்ய இவ்வளவு மெனக்கெடுவது தேவையற்றது” எனப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

குழப்பத்தில் விநியோகஸ்தர்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கேஒய்சி சரிபார்ப்பிற்குப் பிறகு இத்தகைய செய்தி கள் அனுப்பப்படுவதால் வாடிக்கையா ளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள் ளதாக எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரி விக்கின்றனர்.

ஊரடங்கு காலத்திற்குப் பிறகு குறைக்கப்பட்ட இந்த மானியத் தொகை மீண்டும் உயர்த்தப்படாத நிலை யில், இந்த புதிய நடவடிக்கை நுகர்வோரை எரிச்சலடையச் செய்துள்ளது.