தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எரிகிறது...

8 Jun 2026, 9:06 pm
எரிகிறது...

எரிகிறது...

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளை விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சிலிண்டருக்கு ரூ.29 உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் கடந்த மூன்று மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.89 உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.957.50 ஆகவும், வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.3,283 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

போர்ச்சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று ஒன்றிய அரசு நியாயப்படுத்துகிறது. ஆனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் பீப்பாய் 108 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 15 டாலர் குறைந்துள்ளது. ஆனால் சர்வதேசச் சந்தை நிலவரத்தை காரணம் காட்டி தொடர்ச்சியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுவது அநியாயமாகும்.

ஒன்றிய ஆட்சியாளர்கள் வேறொரு விநோ தமான காரணத்தையும் முன் வைக்கின்றனர். 5 மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக எரி பொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாததால் அதை ஈடுகட்ட தற்போது தொடர்ச்சியாக விலை உயர்த்தப்படுகிறது என்கிறார்கள்.

எண்ணெய் விலையை அரசு தீர்மா னிப்பதில்லை. சந்தைதான் தீர்மானிக்கிறது என்பது போலித்தனமான ஏமாற்றுவாதம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அரசு நினைத்தால் விலை உயர்வை நிறுத்தி வைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். ஆனால் தேர்தல் ஆதாயத்திற்காக விலையை உயர்த் தாத ஒன்றிய அரசு தேர்தல் முடிந்தவுடன் விலையை ஏற்றி மக்களை தண்டிக்கிறது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதன் முறையாக 8.3 சதவீத மாக அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை மேலும் உயரக்கூடும் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் தொடர்ந்து அபாயச் சங்கு ஊதுகின்றனர். சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் நலனை விட்டுக் கொடுத்து அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிவதும், இந்த விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது. சர்வதேசச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை விடுத்து எரிசக்திக்கு அமெரிக்காவை மேலும் சார்ந்திருக்கச் செய்யும் மோடி அரசின் திட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.