தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 Jul 2026, 10:04 pm

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்

சென்னை, ஜூலை 13 - தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரான லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நிய மனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான பணி நியமன ஆணையை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னி லையில் வழங்கினார். இப்பொறுப்பில் அவர் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாடநூல் கழகத்தின் பணிகள்

1970 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த நிறு வனம், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களைத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் விநியோகம் செய்தல் ஆகிய முக்கியப் பணிகளை மேற் கொண்டு வருகிறது. 1993 ஆம் ஆண்டில், சங்கங்களின் பதிவு சட்டத்தின்கீழ் இது ‘தமிழ்நாடு பாடநூல் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக, திமுக ஆட்சி யில் திண்டுக்கல் ஐ. லியோனி இந்தப் பதவியில் இருந்த நிலையில், தற்போது லயோலா மணி அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

இடைத்தேர்தல்: கேவியட் மனு தாக்கல்

சென்னை, ஜூலை 13- தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால், தன் தரப்பு வாதங்களைக் கேட்காமல் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப் பிக்கக் கூடாது என்று இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுதாரர் வெங்கடாஜலபதி உச்ச நீதிமன்றத்தில் கேவி யட் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தொடக்கம்

சென்னை, ஜூலை 13 - நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறி யியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்களன்று (ஜூலை 13) தொடங்கியது. முதல் நாளில் அரசுப் பள்ளியில் பயின்ற 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. 38 இடங்கள் உள்ள விளையாட்டு வீரர்கள் பிரி வில் 504 பேர் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 150 இடங்களுக்கு 14 பேர் மட்டுமே பங்கேற்றனர். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவு ஆகியவற்றை காலை 10 மணி முதல் தேர்வு செய்யலாம் என்றும், தேர்வு செய்த கல்லூரிக்கான ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 15 அன்று காலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெற விருக்கிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 20 முதல் 30 ஆம் தேதி வரை 40 நாட்கள் நடைபெ றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலி யாக உள்ள உயர் பணி யிடங்களுக்கு உடனடி யாகப் பதவி உயர்வு வழங்கக் கோரி, வரும் ஜூலை 15 (புதன்கிழமை) அன்று மாநிலம் தழுவிய அளவில் வட்டாரத் தலை நகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ் நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரியலூரில் அண் மையில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் இ முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்துச் சங்கம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில்: துறையில் காலியாக உள்ள கூடுதல் இயக்கு நர், இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பக் கோரி பலமுறை வலியு றுத்தியும், அரசு இது வரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வில்லை. தவெக அரசு பதவி உயர்வு கோப்பு களைக் கிடப்பில் போட்டு உள்ளதால், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்ப டுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன், பணி யாளர்களின் அடுத்தடுத்த பதவி உயர்வு வாய்ப்பு களும் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, பதவி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, ஜூலை 15 அன்று காலை 10 மணிக்கு உணவு இடைவேளையில் அனைத்து வட்டாரக் கிளைகளிலும் இந்த ஆர்ப்பாட்டம் எழுச்சி யுடன் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்

புதுச்சேரி: சொத்து பிரச்சனையில் சகோத ரரை தாக்கிய வழக்கு தொடர்பாக உயர் நீதி மன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜரானார். 2022-இல் புதுச்சேரியில் வீட்டின் கதவை உடைத்துச் சென்று, சொத்து பிரச் சனை தொடர்பாக சகோ தரர் மரிய குலோத் மற்றும் அவரது மனை வியை தாக்கியதாக மரிய வில்சன் மீது புகார் தெரிவிக்கப்பட்டி ருந்தது.