தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர் மேலாண்மை விதிகளை கடைப்பிடிக்கக்கோரி மனு

7 Oct 2026, 12:12 am
நீர் மேலாண்மை விதிகளை கடைப்பிடிக்கக்கோரி மனு

நீர் மேலாண்மை விதிகளை கடைப்பிடிக்கக்கோரி மனு

ஈரோடு, அக்.6-கீழ்பவானி ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு உடனடியாக உயிர்நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கீழ்பவானி பாசன விவசாயிகள் திங்களன்று ஈரோடு ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

அம்மனுவில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணை கீழ்பவானி அணை. இந்த அணை கட்டுவதற்கு 10.5 கோடி ரூபாயை கீழ்பவானி பாசன பயனாளிகள் மட்டுமே கொடுத்துள்ளனர். இதில் பழைய பவானி பாசன பயனாளிகளின் பங்களிப்பு ஏதும் இல்லை. கடந்த 69 ஆண்டுகளாக அரசாணை, விதிமுறை, காவிரி தீர்ப்பு என எதுவும் பின்பற்றப்படாமல் விருப்பு வெறுப்பு மற்றும் ஆதாயஅடிப்படையில் நீர் நிர்வாகம் நடைபெற்று வந்துள்ளது. இது பவானிபாசன பயனாளிகளிடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. இது உள்நோக்கம் கொண்ட,திட்டமிட்ட பிரித்தாளும் சூழ்ச்சியாகும். பவானி ஆறு மற்றும் பழையபவானி பாசன கால்வாய் கரைகளில் இயங்கி வரும் ஆளுமை கொண்ட ஆலைகளே இத்தகையமுறைகேடுகளுக்கு அடிப்படை காரணம். இதனால் பழைய பவானி பாசனங்களுக்கு கட்டுப்பாடற்றுநீர் தொடர்ந்து வருவதும், காளிங்கராயன் பாசனப்பகுதி மாசுபட்டிருப்பதும், இப்பகுதி செழிப்பையும், செல்வாக்கையும் இழந்துவருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி தடையானை பெற்ற நிலையில், தவறு கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே தவறான கருத்துரு தயாரித்து தப்பான நீர் நிர்வாகத்திற்கு துணை நின்ற முன்னாள், இன்னாள் அதிகாரிகள், ஆட்சியர்கள், அமைச்சர்கள் ஆகியோர் இதற்கு பொறுப்பு.இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், முறைகேடாக சேர்த்திருக்கும் சொத்துகளையும் அரசு பறிமுதல் செய்ய முன்வர வேண்டும். எல் - நினோ பாதிப்புள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்குவிட வேண்டிய நீரை ஒரு போகத்திற்கு கொடிவேரி பாசனத்திற்கு நடப்பாண்டு திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 45நாட்கள் உயிர்நீர் விடப்பட்டுள்ளது. கீழ்பவானி அணை பாசனத்தில் ஒற்றைப்படை எண்கள் கொண்ட ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கு 15 நாட்கள் மட்டுமே உயிர் நீர்விடப்பட்டது. இரட்டைப்படை எண்கள் கொண்டு கீழ்பவானி ஆயக்கட்டு நிலங்களுக்கு 18 மாதங்களுக்கும் மேலாக நீர் விடப்படவில்லை. இதனால் கடும் வறட்சிநிலவுகிறது. பல இடங்களில் குடிநீர் பஞ்சம் தலைதூக்கியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உயிர்நீர் திறக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். கடந்த கால நிர்வாக தவறு இனியும் நடந்தால் போராட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.