விடியும் வரை உழைக்கும் கைகளுக்கு உயராத கூலி!
2 Jan 2026, 3:33 pm
<p><strong>விடியும் வரை உழைக்கும் கைகளுக்கு உயராத கூலி!</strong></p>
<p>தமிழகத்தில், ஈரோடு மாவட் டத்திற்கு என்று தனித்துவ மான இடமுண்டு. ஒரு காலத்தில் விவசாயத்தை மட்டுமே ஆணி வேராகக் கொண்டிருந்த இந்த மண், 20 ஆம் நூற்றாண்டில் ஜவுளித்துறையின் விஸ்வரூப வளர்ச்சியால் உலகப் புகழ்பெற் றது. இன்று பட்டு, பருத்தி, ஜரிகை சேலைகள் முதல் ஆயத்த ஆடை கள், வீட்டு உபயோக ஜவுளிகள் என ஈரோட்டின் நூலிழைகள் படராத நாடுகளே இல்லை எனலாம். திங்கட்கிழமை தோறும் கூடும் ஈரோடு வாரச்சந்தை ஒரு ஜவுளித் திருவிழாவைப் போன்றது. விடிய விடிய நடைபெறும் இந்த வர்த்த கத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வணிகர் களும், வெளிநாட்டு ஏற்றுமதியா ளர்களும் சங்கமிக்கின்றனர். 2023-24 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 36.7 பில்லியன் டாலர் மதிப் பிலான ஏற்றுமதி வர்த்தகம் நடை பெற்றுள்ளது. ஒன்றிய அரசு 350 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி பயணிப்பதாகக் கூறினாலும், அந்த பிரம்மாண்ட இலக்கின் பின் னணியில் அடித்தட்டு தொழிலாளர் களின் வியர்வை துளிகள் மறைந்து கிடக்கின்றன. பருத்தி ஆலைகளில் தொடங்கி வார்பிங், சைசிங், விசைத்தறி, ஆட்டோ லூம் எனப் பல நிலை களை கடந்து ஒரு துணி உருவா கிறது. ஆனால், இந்த ஒட்டுமொத்த உற்பத்திச் சங்கிலியையும் பிணைக் கும் தவிர்க்க முடியாத கண்ணி ‘சுமைப்பணி’. மாட்டு வண்டிகள் காலம் முதல் நவீன வாகனங்கள் காலம் வரை, ஜவுளிப் பொதிகளை ஏற்றுவதும், கிடங்குகளில் அடுக்கி வைப்பதும், வாடிக்கையாளர்க ளுக்கு அனுப்புவதும் இந்த உடலு ழைப்புத் தொழிலாளர்களின் கைக ளால்தான் சாத்தியமாகிறது. இவர் களின் உழைப்பு இல்லாமல் ஒரு இன்ச் துணி கூட ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்ந்துவிட முடியாது. இவ்வாறான தொழில் வளர்ச் சிக்கு கூலி உயர்வு அவசியமாகி றது. தொழிலாளர்களின் உற் பத்தி திறனை அதிகரிக்க முக்கிய மானது. அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. அவர்களை நம்பியுள்ள குடும்பத் தினர் அடங்கிய வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் வாங்கும் சக்தி குறைகிறது. இந்த இடைவெளியை கூலி உயர்வு சமப்படுத்துகிறது. அரசு நலத்திட்டங்கள் ஒருபுறம் கிடைத்தாலும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பலவும் வணிகமயமாகி யுள்ள நிலையில் விலைவாசி உயர்விற்கேற்ப கூலி உயர்வு வழங் குவது மிகவும் அடிப்படையானது. அரசு திரட்டப்பட்ட தொழிலா ளர்களுக்கு ஊதியக்குழு மற்றும் அகவிலைப்படி உள்ளிட்ட ஏற்பாடு கள் மூலம் குறிப்பிட்ட இடைவெளி யில் ஊதிய உயர்வு அளிக்கும் நடைமுறை உள்ளது. ஆனால் கடைவீதியில், நிறுவனங்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழி லாளர்களுக்கு அவர்கள் சார்ந்தி ருக்கும் தொழிற்சங்கங்கள் கூலி உயர்வு கேட்டு கோரிக்கை வைக் கின்றன. உரிமையாளர் சங்கங் கள் அழைத்து இருதரப்பு அல்லது தொழிலாளர் துறை முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடைபெற்று உடன்பாட்டிற்கு வருவது வாடிக் கையானது. ஈரோட்டில் சுமைப்பணியாளர் களுக்குக்காக செயல்படும் சிஐ டியு உள்ளிட்ட மத்திய தொழிற் சங்கங்கள் கூலி உயர்வு கோரிக்கை விடுக்கும் நடைமுறையும், அதன் படி பேச்சுவார்த்தை மூலம் உடன் பாடு காணும் நடைமுறையும் உள் ளது. இவ்வாறு ஏற்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட் டது. இதைத்தொடர்ந்து தொழிற்சங் கங்கள் கூலி உயர்வு கோரிக்கை விடுத்தன. ஆனால் இதுவரை ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மூன்று முறை நினைவூட்டல் கடிதம் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் எதிர்தரப்பு அசைந்து கொடுக்கவில்லை. எனவே, (3.1.2026) இன்று ஆர்ப் பாட்டம் அறிவித்துள்ளனர். அரசின் தலையீடு அவசியம் தொழில் அமைதி நிலவ வேண் டுமானால், தொழிலாளர்களின் வயிற்றில் அடி விழக்கூடாது. பிடிவா தம் பிடிக்கும் உரிமையாளர் தரப்பை அழைத்து, தொழிலாளர் துறை முன்னிலையில் சுமூகமான பேச்சுவார்த்தைக்கு அரசு வழி வகை செய்ய வேண்டும். ஈரோட் டின் ஜவுளித் தொழில் மேலும் சிறக்க வேண்டுமானால், அதன் முதுகெலும்பாக விளங்கும் சுமைப் பணி தொழிலாளர்களின் வாழ்வு செழிக்க வேண்டும். -சக்திவேல்</p>
