தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
22 Nov 2025, 4:09 pm
<p><strong>தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி</strong></p>
<p>சென்னை, நவ.22 - தெற்கு அந்தமான் கடலில் காற்ற ழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.24 ஆம் தேதி அளவில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக் கூடும். இதனால், கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாத புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கட லூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.</p>
