மாடுகளின் வரத்து குறைவு
25 Nov 2025, 3:29 pm
<p><strong>மாடுகளின் வரத்து குறைவு</strong></p>
<p>பொள்ளாச்சி, நவ.25- பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாடுக ளின் வரத்து குறைந்ததாக சந்தை நிர்வாகி கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாட் டுச்சந்தை தமிழகத்தில் புகழ்பெற்ற சந்தைக ளில் ஒன்றாகும். ஒவ்வொரு வாரமும் செவ் வாய்க்கிழமை சந்தை நடைபெறும் அன் றைய தினம் தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் இருந்து மாடுகள் வளர்க்கும் விவ சாயிகள் மற்றும் வியாபாரிகள் மூலமாக ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டு வரப் பட்டு விற்பனை செய்யப்படும். சராசரியாக இரண்டாயி ரத்துக்கும் அதிகமான மாடுகள் விற் பனையாகும். பொள்ளாச்சி சந்தையில் இருந்து பெரும்பாலும் கேரளா விற்கு மாடுகள் வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற சந்தையில் சுமார் 1700 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தை நிர்வாகி தெரி வித்தார். வழக்கத்திற்கு மாறாக மாடுகளின் வரத்து குறைந்ததாக தெரிவித்தனர்.</p>
