ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தங்கம் வென்றார் லவ்லினா போர்கோஹைன்!
2 Oct 2026, 1:59 pm

'மினி ஒலிம்பிக்' என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் 20ஆவது சீசன், ஜப்பான் நாட்டின் ஐச்சி - நகோயா நகரில் நடைபெற்று வருகிறது.

தற்போது இத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் - சீனாவின் பாவோ ஜியி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார். சீனாவின் பாவோ ஜியி வெள்ளிப்பதக்கமும், கஜகஸ்தான் (நடாலியா), வியட்நாம் (லு தியம்) வீராங்கனைகள் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

முதல் தங்கம்

ஒலிம்பிக் பதக்க நாயகியான லவ்லினா போர்கோஹைன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் 2022ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் லவ்லினா வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.