தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காதல் கேன்சரையும் வெல்லும்! - விஜித் குமார்

21 Mar 2026, 2:42 pm
காதல் கேன்சரையும் வெல்லும்! - விஜித் குமார்
<p><strong>காதல் கேன்சரையும் வெல்லும்!</strong></p> <p>&ldquo;கேன்சர் என்று தெரிந்தபோது விலகிக்கொள்ள அல்ல&hellip; நிழலாக அணைத்துக் கொள்ளத்தான் அவர் முடிவு செய்தார்&hellip;&rdquo; வாழ்க்கை ஒரு கணத்தில் தலைகீழாக மாறியபோது சிதறிப்போனது பெபா என்ற இளம்பெண்ணின் கனவுகள். தனது காதலனின் தோளில் சாய்ந்து ஒரு அழகான குடும்ப வாழ்க் கையை கனவு கண்டு கொண்டிருந்த காலத்தில்தான் வில்லனாக கேன்சர் வந்து நின்றது. வீட்டுப் பொறுப்புகள், குடும்பச் சுமைகள் அனைத்தையும் சுமந்தபடி வாழ்ந்த பெபாவின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. தன் நோயை அறிந்ததும், நிச்சயதார்த்தம் செய்திருந்த ஜஸ்டினையும் அவரது குடும்பத்தையும் இந்த துயரத்தில் இழுக்க வேண்டாம் என்று பெபாவின் தந்தை நினைத்தார். ஆனால் அங்கேயே காதலின் உண்மையான முகம் வெளிப்பட்டது. &ldquo;இப்போது பெபாவுக்கு தேவையானது தன்னம்பிக்கையும் நாங்களும் தான்&rdquo; என்று சொல்லி, மரணத்தின் விளிம்பில் நின்றிருந்த அவளை ஜஸ்டின் மார்போடு அணைத்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு உடனே சிகிச்சைக்காக வேலூருக்கு பயணம். நான்காம் நிலை கேன்சரின் வலியால் அவள் துடித்தபோதும், அவளுடன் நின்று துணைநின்றார் ஜஸ்டின். கீமோ சிகிச்சையின் வேதனையில் அவள் சோர்ந்தபோது, ஒரு குழந்தையைப்போல மருந்தும் உணவும் கொடுத்து கவனித்தார். மரண நிழலிலிருந்து வாழ்க் கைக்குத் திரும்பிய அவளின் பயணம் காதலின் வலிமையால் சாத்தியமானது. மருத்துவர்கள் கடினம் என்ற பல விஷயங்களும் இவர்களின் வாழ்க்கையில் நடந்தன. ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறிய நிலையில், அதிசயமாக பெபா தாயானார். 2024 மார்ச் மாதத்தில் அந்த தேவதைக் குழந்தை அவர்களின் வாழ்க்கையில் வந்தபோது, எல்லா வேதனைகளுக்கும் அர்த்தம் கிடைத்தது. &ldquo;காயப்படுத்துவது கடவுள் என்றால், குணப்படுத்துவதும் அவருடைய கரமே&rdquo; என்று நம்பும் இந்த தம்பதிகள் இன்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையின் ஒளியாக இருக்கிறார்கள். காதலால் கேன்சரையும் வெல்ல முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இந்த அதிசயமான உயிர்ப்புப் போராட்டத்திற்கு நாமும் வணக்கம் செலுத்துவோம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.