களத்தில் மலர்ந்த காதல்: எல்லையைக் கடந்த உறவுகள்!
24 Feb 2026, 3:55 pm
<p><strong>களத்தில் மலர்ந்த காதல்: எல்லையைக் கடந்த உறவுகள்!</strong></p>
<p>பச்சைப் புல்வெளியில் தொடங்கும் போட்டி, சில நேரங்களில் வாழ்க்கை முழுவதும் நிலைக்கும் உறவாக மலர்கிறது. கிரிக்கெட் மைதானம் என்பது வெறும் போட்டி களமல்ல; அது இதயங்கள் இணையும் இடமும்கூட. உலகெங்கிலும் உள்ள பல கிரிக்கெட் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் துறையினுள்ளேயே காதல் கண்டு, திருமண பந்தத்தில் இணைந்தி ருக்கிறார்கள். அவர்களின் கதைகள், விளையாட்டின் மீதான பகிரப்பட்ட ஆர்வமும், பரஸ்பர புரிதலும் எவ்வாறு வலுவான உறவுகளை உருவாக்கு கின்றன என்பதற்கான அழகான எடுத்துக்காட்டுகள். காதல் கதைகள் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் சிறந்த விக்கெட் கீப்பரான எலிசா ஹீலி, அதே நாட்டின் வேகப்பந்து வீச்சா ளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் திரு மணம், விளையாட்டு வாழ்க்கையை யும் தனிப்பட்ட வாழ்க்கையையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதற்கான முன்மாதிரி. அதே போல இலங்கை கிரிக்கெட்டின் இரு சகாப்தங் களை பிரதிநிதித்துவப்படுத்தும் அட்ட பட்டு மற்றும் குமார சங்ககரா ஆகி யோரின் உறவும், விளையாட்டின் மீதான பகிரப்பட்ட அன்பால் வலுப் பெற்றது. நியூசிலாந்தின் ஹாலெ ஜென்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் நிகோலா ஹன்கோக் ஆகியோரின் உறவு, கிரிக்கெட் உலகில் பன்முகத் தன்மை மற்றும் உள்ளடக்கத்தின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இரு வரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட போது, அந்த மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்திய வீராங்கனை உத்கர்ஷா பவார், ருதுராஜ் கெய்க்வாட்டை காத லித்து திருமணம் செய்து கொண்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இந்திய பெண் வீராங்கனை அஞ்சு சோப்ரா கவாஸ்கரின் மகன் ரோஹனை மணந்தார். மும்பையின் மான்சி ஜோஷி, முன்னாள் வீரர் ரமேஷ் பவாரை மணந்தார். ஆஸ்திரேலியாவின் முன் னாள் கேப்டன் அலெக்ஸ் பிளாக்வெல் மற்றும் இங்கிலாந்து வீராங்கனை லின்சி அஸ்க்யூ, தென் ஆப்பிரிக்க கேப்டன் டேன் வான் நீகெர்க், மரிசான் கேப் ஆகியோரும் களத்தில் பிறந்த காதலின் சாட்சிகள். அண்ணன் தங்கை பந்தம்: குடும்ப உறவாக மலர்ந்த நட்பு கிரிக்கெட் வட்டாரத்தில் உரு வாகும் நட்பு சில நேரங்களில் குடும்ப பந்தமாக மாறுவது சுவாரஸ்யமான நிகழ்வு. இந்திய கிரிக்கெட்டின் சிகர மாக விளங்கிய சுனில் கவாஸ்கரும் குண்டப்பா விஸ்வநாத்தும் இதற்கு சிறந்த உதாரணம். விஸ்வநாத், கவாஸ்கரின் சகோதரி கவிதாவை 1978 இல் மணந்தார். வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா ஆகி யோர் சகோதரிகளை மணந்து இரட்டை மைத்துனராக இணைந்தவர்கள். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் பாப் டு ப்ளெசிஸின் சகோதரி ரெமி ரைனர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோயனை மணந்தார். இங்கிலாந்தின் அலெக் ஸ்டீவர்ட் மற்றும் மார்க் புட்சர், ஆஸ்திரேலியாவின் டேரன் லேமன் மற்றும் இங்கிலாந்தின் கிரேக் வைட், இந்தியாவின் அஜித் அகர்கர் மற்றும் மஜார் காடியாலி, விக்ரம் ராத்தோர் ஆஷிஷ் கபூர், பாகிஸ்தானின் உஸ்மான் காதிர், உமர் அக்மல், வங்கத்தின் அக்ரம் கான், பாரூக் அகமது ஆகியோ ரும் சகோதரிகளை மணந்து மைத்துனர் களாக மாறிய கிரிக்கெட் ஜோடிகள். இதில் சுவாரஸ்யம், அக்ரம் வயதில் இளையவராக இருந்தும் மூத்த சகோ தரி ஷாரியாவையும் பாரூக் இளைய சகோதரி சபீனாவையும் மணந்தனர். சர்ச்சைகளுக்கு இடையில் பிறந்த உறவுகள் பாகிஸ்தானின் சலீம் மாலிக் மற்றும் இஜாஸ் அகமது ஆகியோர் 1990களில் 39 டெஸ்ட் மற்றும் 174 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றாக விளை யாடிய மைத்துனர்கள். ஆனால் அவர் களின் வாழ்க்கை மேட்ச் பிக்சிங் விசாரணையில் சிக்கி, சர்ச்சைக்குள்ளா னது. மாலிக் வாழ்நாள் தடை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் ஆனார். பிற கண்டங்களில் பூத்த காதல் ஜிம்பாப்வேயின் டொனால்ட் திரிபா னோ மற்றும் சிப்போ முகேரி, இங்கி லாந்தின் ரோஜர் பிரிடாக்ஸ் மற்றும் ரூத் வெஸ்ட்புரூக், இந்தியாவின் வேதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அர்ஜுன் ஹொய்சாலா போன்றோரும் கிரிக்கெட் மீதான பகிரப்பட்ட ஆர்வத்தால் இணைந் தவர்கள். களத்தில் எதிரணியாக இருந் தாலும், வாழ்க்கையில் துணையாக இருக்கும் இந்த ஜோடிகள், கிரிக்கெட் என்பது வெறும் ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் மட்டுமல்ல என்பதை உணர்த்துகிறார்கள். பச்சை புல்வெளியில் துவங்கி, வாழ்க்கை முழுவதும் நீடிக்கும் இந்த உறவுகள், எல்லைக் கோட்டிற்கு அப்பால் செல்லும் பிணைப்புகளின் சான்றுகள். வெறும் போட்டிக்களம் மட்டு மல்ல - அது காதல் மலரும் தோட்டமும்கூட என்பதை நிரூபிக்கும் இந்த ஜோடி களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! -சி.ஸ்ரீராமுலு</p>
