லூர்து காலனி மக்கள் தாலுகா அலுவலகத்தில் போராட்டம் ஜூலை 25-இல் பட்டா வழங்க அதிகாரிகள் ஒப்புதல்
21 Jul 2026, 9:32 pm
<p><strong>லூர்து காலனி மக்கள் தாலுகா அலுவலகத்தில் போராட்டம் ஜூலை 25-இல் பட்டா வழங்க அதிகாரிகள் ஒப்புதல்</strong></p><p>சிபிஎம் தொடர் போராட்டம் வெற்றி நாகர்கோவில், ஜூலை 21 - அகஸ்தீஸ்வரம் தாலுகா மதுசூதனபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த லூர்து காலனி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய தொடர் போராட்டத்தால் வரும் சனிக்கிழமை பட்டா கிடைக்க உள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகா லூர்துபுறம் கால னியைச் சேர்ந்த 64 குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அவர்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சிபிஎம் ராஜாக்கமங்கலம் ஒன்றியம், இதில் தலை யிட்டு அந்த மக்களுக்கு உதவ முன் வந்தது. தொடர்ந்து போராட்டங்கள் அறிவிப்பு, அதி காரிகளிடம் மனு உள்ளிட்டவை முன்னெ டுத்து கொடுக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அவர்களுக்கு பட்டா வந்ததாக அதிகாரிகள் தெரிவித்த னர். ஆனால் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இது குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்பகுதி மக்களை அதிகாரிகள் அலைக் கழித்தனர். இந்நிலையில் ஜூலை 21 ஆம் தேதி அப்பகுதி மக்கள் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிபிஎம் குமரி மாவட்டச் செய லாளர் என்.எஸ்.கண்ணன், ராஜாக்கமங்க லம் ஒன்றியச் செயலாளர் ராஜகுமார் உள்ளிட் டோர் தாசில்தார் ஆறுமுகம், ஆர்டிஓ செந்தில் வேல்முருகன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்டாயமாக சனிக் கிழமை பட்டா தருவதாக கூறினர். ஆனால் அப்பகுதி மக்கள் மற்றும் சிபிஎம் ஏற்க வில்லை. மேலும் தாசில்தார் மற்றும் வரு வாய் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவ லர் ஆகியோரை அழைத்து கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் சனிக்கிழமை (ஜூலை 25) காலை சுற்றுலாத்துறை அமைச் சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவருக்கும் பட்டா அளிக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எங்களை அலைக் கழித்து விட்டு மேலும் அலைக்கழிக்க பார்க்கிறீர்களா என்று அதிகாரியிடம் கேட்டனர். கட்டாயமாக ஜூலை 25ஆம் தேதி பட்டா வழங்கப்படும். வர முடியாத பயனாளி களுக்கு வீடு தேடிச் சென்று பட்டா வழங்கப் படும் என்று தெரிவித்தனர். பொது மக்கள் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். எஸ். கண்ணன் அந்த மக்களிடம் உண்மை நிலை குறித்து எடுத்துரைத்தார். வரும் சனிக் கிழமை கட்டாயமாக அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து பட்டாவை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு நாங்கள் பொறுப்பு என்று பேசினார். அதன்பின், மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து போராட்டங்கள், மனு கொ டுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை களில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இது கருதப்படுகிறது.</p>
