தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

29 Dec 2025, 6:22 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

திருப்பூர், டிச.29- மூலனூர் சாலையில் சனிக்கிழமை இரவு வெள்ளக்கோ வில் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது புதுப்பை பேருந்து நிறுத்தம் அருகில் மூன்று  எண் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் குமாா் (47) என்பவரை கைது செய்தனர். விசாரணை யில், வெளி மாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள்  எழுதப்பட்ட துண்டுச் சீட்டை ரூ.50 க்கு விற்பனை செய்து,  குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரி யவந்தது.

சிஐடியு பெயர் பலகை திறப்பு

திருப்பூர், டிச.29 - பெருமாநல்லூர் சிஐடியூ சுமைப்பணி சங்கம் பெயர் பலகை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் பி பாலன் பெயர் பலகையை திறந்து வைத்து உரை யாற்றினார். இதன் திறப்பு விழாவில் பெருமாநல்லூர் பகுதி  சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் மாணிக்கம், பொருளா ளர் வேலுச்சாமி, சின்னச்சாமி மற்றும் பலர் பங்கெடுத்து கொண்டார்கள்.

அரசுப்பணி தேர்வு இலவச பயிற்சி  உடுமலையில்

ஜன.7இல் தொடங்கும் திருப்பூர், டிச.29- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026 ஆண்டு திட்ட  நிரலில் 2 ஏ பணிகளுக்கு ஜன.25 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  2026 ஆம் ஆண்டு டிச.20 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு கள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தின் கூடுதல் பயிற்சி மையமான உடும லைப்பேட்டை, எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வரும் ஜன.7 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கும்.  மேலும், இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள்  நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியில்  கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990 55944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து, பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

திருப்பூரில் 2.77 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: ஆட்சியர் தகவல்

திருப்பூர், டிச.29- திருப்பூர் 2.77 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ள தாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், இடு வாய் ஊராட்சி கருப்பகவுண்டம்பாளை யத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் 8  ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே திங்களன்று துவக்கி வைத்து பார்வை யிட்டார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை கள் உயிர்காக்க முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக, கால்நடை பராமரிப்புத்துறை யின் மூலம் தேசிய கோமாரி நோய் தடுப் பூசி திட்டத்தின் கீழ் 2025 - 26 ஆம் ஆண்டு  18 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்  பணி தொடங்கியுள்ளது. இந்த பணி வரும் 18  ஆம் தேதி முதல் நடைபெறும். 2,77,700 கால்ந டைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 112  தடுப்பூசி குழுக்கள் மூலம் ஒவ்வொரு கிராம மாக முகாம் அமைத்து போடப்படும்.  இந்த தடுப்பூசி பசு மற்றும் எருமை மாடுக ளுக்கு நான்கு மாதத்திற்கு மேல் வயதுடைய  அனைத்து கால்நடைகளுக்கும் இல வசமாக போடப்படும். இந்தத் தடுப்பூசி 6 மாதங்களுக்கு ஒரு முறை போடப்படும். இந் நோய் கால்நடைகளை தாக்கினால் வாய்  முதல் குடல் வரை புண் ஏற்படும். கால் குழம் பில் புண் ஏற்பட்டு புழுக்கள் உருவாகி நடக்க முடியாத நிலை உருவாகும். அதனால் பால்  உற்பத்தி குறையும் சினை பிடிப்பு தன்மை  குறையும். கன்றுகளில் இறப்பு ஏற்படும்.  இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு தேசிய கால் நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். எனவே எதிர்வ ரும் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தங்கள்  பகுதியில் கால்நடைகளை அழைத்து வந்து,  விடுபடாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட் டுக் கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.