தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவறவிட்ட 16 பவுன் நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்டு ஒப்படைப்பு

26 May 2026, 10:02 pm
தவறவிட்ட 16 பவுன் நகைகள்  ஒருமணி நேரத்தில் மீட்டு  ஒப்படைப்பு
<p><strong>தவறவிட்ட 16 பவுன் நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்டு ஒப்படைப்பு</strong> </p><p> தூத்துக்குடி, மே 26- சென்னை வியாசர்பாடி சாமியார்தோட்டம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளனர். பின்னர் கோவில்பட்டியில் இருந்து கடலை யூர் வழியாக ஆட்டோவில் வந்து வீரப்பட்டியில் இறங்கி னர். அப்போது சிறிய அளவிலான கைப்பை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. தவறவிட்ட அந்த சிறிய கைப் பையில் வளையல், கம்மல் செயின், கைச்செயின் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது, இதுகுறித்து சாந்தி மற்றும் பாலமுருகன் உடனடியாக, எட்டையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் எட்டையபுரம் போலீசார் கைப் பையில் உள்ள செல்போன் நம்பரின் லொகேஷன் சிக்னல் மூலம் பார்த்தபோது, அந்த செல்போன் சிக்னல் கடலையூர் - வீரப்பட்டி சாலையிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில் காட்டியுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அந்த ஹேண்ட்பேக் மண்ணுக்குள் மூடி வைத்த படி இருந்துள்ளது. இதனை அடுத்து மீட்டு கைப் பையில் இருந்த 16 பவுன் தங்கநகை மற்றும் செல்போன் ஆகிய வற்றை விளாத்திகுளம் டி.எஸ்.பி சுந்தரபாண்டியன், காவல்ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலை மையிலான போலீசார் சாந்தி மற்றும் பாலமுருகனிடம் நகைகளை சரி பார்த்து ஒப்படைத்தனர். தவறவிட்ட 16 பவுன் தங்க நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு சாந்தி மற்றும் பாலமுருகன் நன்றிகளை தெரிவித்தனர். தவறவிட்ட நகையை மண்ணுக்குள் புதைத்து வைத்த நபர் யார் என்பது குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.