தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜூன் 15 முதல் லாரி வாடகை 25% உயர்வு லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு

11 Jun 2026, 11:21 pm
ஜூன் 15 முதல் லாரி வாடகை 25% உயர்வு லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு

ஜூன் 15 முதல் லாரி வாடகை 25% உயர்வு லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு

நாமக்கல், ஜூன் 11- எரிபொருட்களின் விலை உயர் வின் காரணமாக லாரி உரிமையா ளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் நோக்கில், வருகிற 15 ஆம் தேதி முதல் லாரி வாடகை கட் டணத்தை 25 சதவீதம் உயர்த்தி அமல்படுத்த முடிவு செய்துள்ள தாக தமிழ்நாடு மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் தெரிவித் துள்ளது.

தமிழ்நாடு மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளனத்தின் செயற் குழு கூட்டம் நாமக்கல்லில் புத னன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு சம்மேளன தலைவர் தன ராஜ் தலைமை வகித்தார்.

இக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் லாரி தொழில் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தன ராஜ் கூறியதாவது, சமீப காலமாக டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.8 வரை உயர்ந்துள்ளது. இதனால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் செலவு, உதிரிபாகங்கள் விலை, பராமரிப்புச் செலவு, சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் தொடர்ந்து அதி கரித்து வருவதால், லாரி உரிமையா ளர்கள் பெரும் நெருக்கடியை சந் தித்து வருகின்றனர்.

இதனையடுத்து லாரி உரிமை யாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள வாடகை கட்டணத்தில் 25 சதவீதம் உயர்வு செய்து, வருகிற 15 ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரே தவணையாக விலை நிர்ணயம் செய்யப்பட்டால் அதற்கேற்ப வாடகை கட்டணத்தை திட்டமிட வசதியாக இருக்கும் என வலியு றுத்தினார். அதேபோல், தேசிய அனுமதி பெற்ற வாகனங்களில் இருப்பிடக் கண்காணிப்பு கருவி (டிராக்கிங் டிவைஸ்) பொருத்துவது கட்டாய மாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கருவிகளை வழங்கும் தனியார் நிறு வனங்கள் அதிக விலைக்கு விற் பனை செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

எனவே, தமிழக அரசு தலையிட்டு குறைந்த விலையில் அந்த கருவிகள் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவற்றை பொருத்துவதற்கு கூடு தல் கால அவகாசம் வழங்க வேண் டும் என்றும் கோரிக்கை விடுத் தார்.

ஆயிரக்கணக்கான லாரிகள் முடக்கம் தேசிய அனுமதி வரியை இணையதளம் வாயிலாக செலுத் தும் வசதி தற்போது நிறுத்தி வைக் கப்பட்டுள்ளதால், வட மாநிலங்க ளுக்கு சென்ற தமிழக லாரிகள் அங்கேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

தேசிய அனுமதி வரியை செலுத்த முடியாததால் ஆயிரக்கணக்கான லாரிகள் சிக்கி யுள்ளன. ஏற்கனவே 10 ஆயிரம் லாரிகள் வரி செலுத்தப்பட்டு விடு விக்கப்பட்டுள்ள நிலையில், இன் னும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக லாரிகள் வட மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் உட னடியாக தலையிட்டு இணைய வழி அனுமதியை மீண்டும் வழங்கி பிரச் சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.