தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிசம்பர் 9 முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

4 Dec 2025, 3:52 pm
டிசம்பர் 9 முதல் லாரி உரிமையாளர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தம்
<p><strong>டிசம்பர் 9 முதல் லாரி உரிமையாளர்கள் &nbsp;காலவரையற்ற வேலை நிறுத்தம்</strong></p> <p>வேலூர், டிச.4- வேலூரில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டம், தென் மாநிலத் தலைவர் கோபால் நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நா டகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்குப் பிறகு சங்கப் பொதுச்செய லாளர் சண்முகப்பா செய்தி யாளர்களிடம்பேசியதாவது: ஒன்றிய, மாநில அரசுகள் லாரிகளின் எப்.சி. &nbsp;(FC - Fitness Certificate) கட்டணத்தை ரூ.850லி ருந்து ரூ.33,040 ஆக உயர்த்தியுள்ளது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், 15 ஆண்டுகள் ஆன சரக்கு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு தென் மாநில லாரி உரிமையாளர்களைப் பெரிதும் பாதிக்கிறது. ஆனால், அரசு வாக னங்களுக்கு இந்த 15 ஆண்டுகால உத்தரவு பொருந்தாது என்று கூறி யிருப்பது முரண்பாடானது. ஏற்கனவே சுங்கக் கட்ட ணக் கொள்ளை, மாநிலச் சோதனைச் சாவடிகளில் கட்டாய லஞ்ச வசூல், டீசல் &nbsp;மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகிய வற்றால் லாரி &nbsp;உரிமையா &nbsp;ளர்கள் &nbsp;நலிவடைந்துள்ளனர். எனவே, இந்த உத்தரவைத் திரும்பப் பெறும் வரையில், வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் தென் மாநில லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வுள்ளோம். இதில் சுமார் 12 லட்சம் லாரிகள் கலந்து கொள்ளும். ரேஷன் பொருட் கள் கொண்டு செல்லும் லாரி கள் உட்பட துறைமுகம், சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்கு களும் ஏற்றப்படாது. இத னால் அனைத்து வகையான பொருட்கள் கொண்டு செல்வதும் பாதிக்கப்படும். கேரள அரசு எப்.சி.கட்ட ணத்தை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல், தமிழகம் உள்ளிட்ட மற்ற அனைத்து மாநில அரசுகளும் எங்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி &nbsp;இந்தக் கட்டண உயர்வை ரத்துசெய்வதாக அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே போராட்டம் திரும்பப் பெறப் படும்; இல்லை யெனில் போராட்டம் தொடரும் என்றும் சண்முகப்பா தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.