லாரி கவிழ்ந்து விபத்து
28 Jan 2026, 2:33 pm
<p><strong>லாரி கவிழ்ந்து விபத்து</strong></p>
<p>அம்பத்தூர், ஜன. 28- ஆவடி அருகே புதன்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார். சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் இருந்து காலணிகள் ஏற்றிக் கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளி வட்டச் சாலையில் லாரி ஒன்று புதன்கிழமை வந்து கொண்டிருந்தது. அந்த லாரி ஆவடி அருகே நெமிலிச்சேரி வெளி வட்டச்சாலையில் சென்ற போது திடீரென லாரியின் பின்பக்க டயர் வெடித்து சாலையில் குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், ஹரி யானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவ சமாக உயிர் தப்பினார். இத னால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பட்டா பிராம் போக்குவரத்து போலீஸார், வண்டலூர் செல்லும் வாகனங்களை அணுகுச்சாலை வழியாக திருப்பி அனுப்பினர். இதன் பிறகு கிரேன் மூலம் போக்குவரத்து போலீஸார் ஒரு மணி நேரம் போராடி லாரியை மீட்டனர்.</p>
