தொழில் அமைதி, உறவை சீர்குலைக்கும் லாரி ஆபீஸ்
5 Dec 2025, 4:21 pm
<p><strong>தொழில் அமைதி, உறவை சீர்குலைக்கும் லாரி ஆபீஸ்</strong></p>
<p>ஈரோடு, டிச.5- நடைமுறைக்கு மாறாக செயல் படும் ரெகுலர் லாரி ஆபீஸ் நிர்வா கத்தின் நடவடிக்கையால் ஈரோடு மாநகரில் தொழில் அமைதி, உறவு சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ள தாக வருவாய் கோட்டாட்சியரிடம் சுமைப்பணி தொழிலாளர்கள் புகா ரளித்தனர். ஈரோடு மாநகரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் மத்தி யில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின் றன. தொழில் அமைதியைப் பேணு தல், தொழிலாளர்கள் திறம்படவும், சிறப்பாகவும் வேலை செய்வதை உத்தரவாதப்படுத்தும் வகையில் சங்கங்களின் செயல்பாடு அமைந் துள்ளது. கடந்த 18.9.1992ஆம் ஆண்டு வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உருவான ஒப்பந்தத் தின் அடிப்படையில் இத்தகைய செயல்பாடு நடைமுறையில் உள் ளது. இந்நிலையில், ஈரோடு சேட் காலனியில் சிஐடியு 10 என்ற எண் கொண்ட சுமைதூக்கும் தொழிலா ளர்கள் கிளை செயல்பட்டு வருகி றது. இக்கிளைக்கு உட்பட்ட பகுதி 80 அகில்மேடு வீதி, முனியப்பன் கோவில் வீதி, சேட் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்து நிலை யம் வரை ஆகும். இதில், 58 அகில் மேடு 4 ஆவது வீதி, ஈரோடு.1 என்ற விலாசத்தில் திருப்பூரைச் சேர்ந்த லட்சுமி டிரான்ஸ்போர்ட் என்னும் ரெகுலர் லாரி ஆபீஸ் கிளை திறக் கப்பட்டுள்ளது. இந்த ரெகுலர் லாரி ஆபீசில் மேற்கண்ட கிளையைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலா ளர்கள் புக்கிங், டெலிவரி ஏற்றி இறக்க வேண்டும். அதன்படி நிறுவனத்தினரை அணுகி வேலை செய்ய கேட்ட தற்கு நிறுவனத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இத னால் அப்பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். இது தொழில் அமைதியும், உறவையும் சீர்கு லைக்கும் போக்காகும். எனவே, உரிய முறையில் தலையிட்டு லட் சுமி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் செயல்படும் பகுதியில் சம்பந்தப் பட்ட கிளை சங்கத்தின் உறுப்பினர் கள் வேலையை செய்வதற்கு உரிய ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று வருவாய் கோட்டாட்சியரிடம் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். சங் கத்தின் பொதுச்செயலாளர் என். செந்தில்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், உத வித்தலைவர் எச்.ஸ்ரீராம் உட்பட திர ளான தொழிலாளர்கள் பங்கேற்ற னர்.</p>
