கனிம கடத்தலை தடுக்க சென்ற அதிகாரியை மிரட்டிய லாரி டிரைவர் கைது
yesterday

கனிம கடத்தலை தடுக்க சென்ற அதிகாரியை மிரட்டிய லாரி டிரைவர் கைது

உளுந்தூர்பேட்டை, நவ.24-கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை மன்னார்குடி பழைய விமான ஓடுதள பாதை அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் தர்மதுரை சோதனைக்கு சென்றார்.

அப்போது அங்கு டி.என்.38 சி.எஸ்.6314 என்ற பதிவு எண் கொண்ட டிப்பர் லாரி யில் சுமார் 4 யூனிட் கூழாங்கற்கள் உரிய அனுமதியின்றி ஏற்றப்பட்டு நின்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதை யடுத்து லாரியை எடுக்க வேண்டாம் என அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த லாரி உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர், அதி காரியை தள்ளிவிட்டு தகாத வார்த்தையில் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் லாரியில் இருந்த கூழாங்கற்களை கீழே கொட்டிவிட்டு லாரியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தர்மதுரை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர். மேலும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.