தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேலூர் அருகே துவரம்பருப்பு ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்தது 100க்கும் மேற்பட்ட மூடைகள் சேதம்

13 Jun 2026, 10:23 pm
மேலூர் அருகே துவரம்பருப்பு ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்தது  100க்கும் மேற்பட்ட மூடைகள் சேதம்

மேலூர் அருகே துவரம்பருப்பு ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்தது 100க்கும் மேற்பட்ட மூடைகள் சேதம்

மேலூர், ஜூன் 13- மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலையில், அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்காக துவரம் பருப்பு மூடைகளை ஏற்றி வந்த லாரி நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

சென்னையிலிருந்து அரசு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்காக சுமார் 600 மூட்டை துவரம் பருப்பை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வெள்ளி யன்று நள்ளிரவு மேலூர் நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி யின் டயரில் திடீரென தீப்பற்றியது. தீ வேகமாக லாரியின் பிற பகுதிக ளுக்கும், அதில் ஏற்றப்பட்டிருந்த துவ ரம்பருப்பு மூட்டைகளுக்கும் பரவத் தொடங்கியது. இதைக் கண்ட ஓட்டு நர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டனர்.

நீண்ட நேரப் போராட் டத்திற்குப் பிறகு தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டது. இந்த விபத்தில் லாரியின் சில பகுதிகளும், சில துவரம் பருப்பு(100க்கும் மேற்பட்ட) மூட்டைகளும் சேதமடைந்த தாக கூறப்படுகிறது.

இருப்பினும், தீய ணைப்புத் துறையினரின் துரித நடவ டிக்கையால் பெரும்பாலான பருப்பு மூடைகளும், லாரியின் முக்கிய பகுதி களும் காப்பாற்றப்பட்டன. இந்த சம்பவம் குறித்து மேலூர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.