தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் - லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

1 Apr 2026, 2:06 pm
திமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் - லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள்
<p>திமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.<br /> தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணி 40.1% வாக்குகளை பெற்று, 181 முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெறும் என லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணி 29% வாக்குகளை பெற்று 38-42 தொகுதிகளிலும், தவெக 23.9% வாக்குகளை பெற்று 8-10 தொகுதிகளிலும் வெற்றி பெறும்; நாதக 4.9% வாக்குகளை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது; மற்றவை 2.1% வாக்குகள் பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.<br /> அதேபோல் இந்த கருத்துக்கணிப்பில், முதலமைச்சர் வேட்பாளர்களில் மு.க.ஸ்டாலினுக்கு 41% ஆதரவுடன் முதலிடமும், விஜய்க்கு 27.1% ஆதரவுடன் இரண்டாமிடமும், எடப்பாடி கே.பழனிசாமிக்கு 24.1% ஆதரவுடன் மூன்றாமிடமும், பிற வேட்பாளர்களுக்கு 9.8% ஆதரவும் கிடைத்துள்ளது.&nbsp;<br /> திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதற்கு முக்கியக் காரணம், &#39;கலைஞர் மகளிர் உரிமைத் தொகை&#39; (மாதம் ரூ. 1000), இலவசப் பேருந்துப் பயணம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற அதன் வலுவான நலத்திட்டங்களே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.