முந்தய பக்கம்

உதகையில் சுற்றித்திரிந்த ஒற்றையானை இடம் பெயர்வு

12 May 2026, 1:14 am
உதகையில் சுற்றித்திரிந்த ஒற்றையானை இடம் பெயர்வு
<p><strong>உதகையில் சுற்றித்திரிந்த ஒற்றையானை இடம் பெயர்வு</strong></p><p>உதகை, மே 11- குன்னூர், உதகையில் இரண்டு மாதங்க ளாக சுற்றித்திரிந்து மக்களை கலக்கமடைய செய்த ஒற்றை யானை, கரும்பாலம் வழியாக குந்தா பகுதிக்கு இடம் பெயர்ந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒற்றை யானை முகாமிட்டு, ஒரு சுற்றுலாப் பய ணியைப்போல பல்வேறு இடங்களில் உலா வந்தது. 60 நாட்களுக்கு முன்பு மேலூர், ஒசஹட்டி கிராமத்திற்குள் புகுந்த இரு யானை களில் கொம்பன் யானை தனியாக பிரிந்து சோகத்தொரை, தேனலை வழியாக உதகை, தொட்டபெட்டா சென்றது. அப்போது பாது காப்பு கருதி தொட்டபெட்டா காட்சிமுனை தற் காலிகமாக மூடப்பட்டது. கடந்த மாதம் தொட்டபெட்டாவிலிருந்து கீழே இறங்கிய யானை, அருவங்காடு வெடிமருந்து தொழிற் சாலை வளாகத்திற்கு வந்து மீண்டும் மைனலா வழியாக உதகை நகருக்குள் உலா வந்தது. தொடர்ந்து, ஞாயிறன்று மைனலா விலிருந்து மீண்டும் ஜெகதளா வழியாக அரு வங்காடு பகுதிக்கு வந்த இந்த யானை, வெடி மருந்து தொழிற்சாலை கதவுகளை சேதப் படுத்தி, கேட்டில் பவுண்ட் பாய்ஸ் கம்பெனி, வெலிங்டன் மற்றும் குன்னூர் ரயில் நிலையப் பகுதிகளுக்குள் புகுந்தது. குன்னூர் ரயில்வே குடியிருப்பில் இருந்து யானையை விரட்ட 10 மணி நேரத்திற்கு மேல் வனத்துறையினர் போராடினர். தொடர்ந்து ஓட்டுப்பட்டறை ஈத்கா மைதானம் வழியாக சந்திரா காலனி பகுதிக்கு விரட்டப்பட்டது. குடியிருப்பு பகுதி களுக்குள் மீண்டும் வராமல் இருக்க வனத் துறையினர் போராடினர். இந்நிலையில், திங் களன்று இந்த யானை கரும்பாலம் வழியாக மீண்டும் குந்தா வனப்பகுதிக்கு சென்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram