மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம்: கல்லறவயல் மக்கள் அச்சம்
29 Jun 2026, 8:51 pm
<p>மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம்: கல்லறவயல் மக்கள் அச்சம்</p><p>நாகர்கோவில், ஜூன் 29 -கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் திங்களன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அந்த யானை பலா மற்றும் உலட்டி மரத்தை நாடி ஊருக்குள் வருகிறது. இரவு 2 மணியளவில் கல்லறவயல் பகுதியில் வந்த காட்டு யானை, தென்னை மரங்களை சேதப்படுத்தி, பலா பழங்களை பறித்து தின்றுள்ளது. பின்னர் பழங்குடி மக்களும், வனத்துறையினரும் சேர்ந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.</p>
