தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

2 Jun 2026, 8:42 pm
லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

லண்டன், ஜூன் 2- இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் முக்கிய போக்குவரத்து வாழ்வாதாரமாக விளங்கும் சுரங்க ரயில் (Tube) ஓட்டுநர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.

வாராந்திர வேலை நாட்களை மாற்றி அமைப்பது தொடர்பான புதிய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதால், லண்ட னின் ஒட்டு மொத்தப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் போக்குவரத்து வாரியம் (TfL) ஓட்டுநர்க ளுக்காக வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முயல்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் வேலை நேர மாறுபாடுகள், ஓட்டுநர்களின் உடல் சோர்வு, ஷிப்ட் நீளம் மற்றும் பாதுகாப்புக் குறை பாடுகள் போன்ற பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்ப தாக ‘ஆர்.எம்.டி’ (RMT) தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அரசு நடத்தியபேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஆர்.எம்.டி சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக லண்டன் ரயில் சேவையின் பெரும்பகுதி முற்றிலும் முடங்கியுள்ளது.

போதிய ரயில்கள் இல்லாததால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், பயணத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் சாலைப் போக்குவரத்தைப் பயன்படுத்த துவங்கியதால் லண்டன் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை. இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற வியாழக்கிழ மையும் இரண்டாவது கட்டமாக மீண்டும் 24 மணி நேர வேலைநிறுத்தம் செய்ய ஆர்.எம்.டி சங்கம் திட்டமிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.