தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம் சீர்குலைவை நோக்கி செல்வது வேதனை மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் பேச்சு

13 Nov 2025, 3:30 pm
பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம்  சீர்குலைவை நோக்கி செல்வது வேதனை மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் பேச்சு
<p><strong>பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம் &nbsp;சீர்குலைவை நோக்கி செல்வது வேதனை மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் பேச்சு</strong></p> <p>சிதம்பரம், நவ 13- பெருமை வாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக் &nbsp;கழகம் சீர்குலைவை நோக்கி செல்வது- வேதனை அளிப்பதாக விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறினார். சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேரா சிரியர்கள் 7-வது ஊதி யக்குழு நிலுவை தொகை களை வழங்க வேண்டும், அயர் பணியிட ஆசிரியர் களை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிலேயே உள்ளெடுப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக இரவு பகல் என தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் 4-ம் நாள் போராட்டத்தை ஆதரித்து து.ரவிக்குமார் எம்.பி பேசினார். &nbsp;பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் பேசுகை யில், தமிழ் மொழி வளர்ச்சிக் &nbsp;காக &nbsp;நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் சுவாமி சகஜா நந்தா உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று சிதம்பரத்தில் துவக்கப் பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம். நூற்றாண்டு காண &nbsp;இருக்கும் அந்தப் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு டைமையாக்கப்பட்டது. அதன் பிறகு &nbsp;அதிமுக அரசு அந்தப் பல்கலைக் கழ கத்தை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்க ளில் இருந்து பல்லாயிரக் &nbsp;கணக்கான மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழ கத்தில் கல்வி பயின்று வந்தனர். ஆனால் இப்போ தோ முன்பிருந்ததில் பாதி எண்ணிக்கையில் கூட மாணவர்கள் இல்லை. அங்கு செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால் பட்டப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத அணுகு முறை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. அதில் அண்ணாமலை பல்கலைக்கழகமும் ஒன்று. அதனால் அதன் நிர்வாகம் முடங்கிப் போயிருக்கிறது. &nbsp;இந்தியாவில் உயர் கல்வியில் தமிழ்நாடு &nbsp;தலை சிறந்து விளங்குவதற்கு &nbsp;அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் ஒரு காரணமாகும். அத்தகையப் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம் இப்படி சீர் குலைந்து கிடப்பது வேதனை அளிக்கிறது. தற்போது அங்கு பணி யாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து உள்ளி ருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசி ரியர்களின் இந்த நியாயமான கோரிக்கை களை முதலமைச்சர் கனி வோடு பரிசீலித்து நிறை வேற்றித் தர வேண்டும் எனக் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.