நாட்டின் வளர்ச்சிக்கு எதிரியான ஊழல் மீது போர் தொடுக்க வேண்டும் மக்களுக்கு லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ. ராமராஜ் அழைப்பு
15 Jul 2026, 11:17 pm

நாட்டின் வளர்ச்சிக்கு எதிரியான ஊழல் மீது போர் தொடுக்க வேண்டும் மக்களுக்கு லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ. ராமராஜ் அழைப்பு

ஊட்டி,ஜூலை 15- உதகமண்டலத்தில் அரசு கலைக் கல்லூரியில் தூய நிர்வாகத்திற்கு லோக் ஆயுக்தா சட்டம் அறிவோம்! என்ற கருத்தரங்கம் கல்லூரியின் முதல்வர் பிராங்கிளின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் பேசிய தாவது. மக்களிடமிருந்து பல்வேறு வகை களில் வரிகளையும் கட்டணங்களை யும் அரசு வசூலிக்கிறது அரசுக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் மக்கள் நலத்திட்டங்களும் சேவை களும் அரசால் வழங்கப்படுகிறது. இவற்றில் நடைபெறும் ஊழல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. பொது ஊழி யர்களும் அரசு ஊழியர்களும் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதற்கும் செய்யாமலும் இருப்பதற்கும் வாங்கும் லஞ்சம் காரணமாக பொதுமக்களின் நல்வாழ்வு பாதிக்கப்படுகிறது. மக்க ளின் நல்வாழ்வுக்கும் நாட்டின் வளர்ச்சி க்கும் ஊழலும் லஞ்சமும் எதிரிகளாக வளர்ந்து நிற்கின்றன. லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிரான போர் நாடு முழு வதும் தொடங்கப்பட வேண்டும் நாட்டு மக்கள் அனைவரும் இந்த போரில் கலந்து கொள்ள வேண்டும். இல்லா விட்டால் நாட்டின் எதிர்காலமும் மக்க ளின் நல்வாழ்வோம் காணாமல் போய் விடும் என்று தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ.ராமராஜ் பேசினார். யாருக்கும் எதற்கும் லஞ்சம் கொடு க்காதீர்கள். நேரடியாகவோ மறைமுக மாகவோ லஞ்சம் கேட்பவர்களை இந்த சமுதாயத்திற்கு காட்டிக் கொடுங்கள். லஞ்சம் கேட்டால் நாடு முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டு குடும்பத்திலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியிலும் சமுதாயத்திலும் அவ மானப்படுத்தப்பட்டு விடுவோம் என்ற பயம் லஞ்சம் கேட்பவர்களுக்கு இருக்கும் வகையில் உருவாக்கப் பட வேண்டும். அரசின் எந்த ஒரு திட்டத்திலும் ஊழல் நடைபெறுவது குறித்து தெரிய வந்தால் உடனடி யாக அதனை சமூகத்திற்கு வெளிப்படு த்துங்கள். தொடக்கத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை வெளிப்படுத்துவது கடுமையானதாக இருக்கலாம். ஒவ்வொரு ஊரிலும் லஞ்சத்துக்கு எதி ரான இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்த இயக்கங்கள் மூல மாக லஞ்சமும் ஊழலும் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று வீ.ராமராஜ் கூறினார். தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது. இந்த புகார்களை தமிழ்நாட்டில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பிலும் சமர்ப்பி க்கலாம். மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் அனைத்து அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்கும் அதி காரம் கொண்டதாக தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே போதுமானதாக இல்லை. தமிழ்நாடு லோக் ஆயுக்தா விசாரணை மன்றம் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழு வதும் ஏற்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும் என்று வீ. ராமராஜ் தெரி வித்தார். எல்லா வகையான தேர்தல்களி லும் பணத்தை கொடுத்து வாக்கை திரட்டும் கலாச்சாரம் நாடு முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அமைப்புகளின் சுதந்திரத்தை பாதுகாக்கவும் வாக்காளர் உரிமை களின் ஆணையத்தை அமைக்கவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாக்காளரியல் கல்வி அவசியமானதாகும் வாக்காளரியல் Voterology கல்வியை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் போதிக்க வேண்டும் என்று வீ.ராமராஜ் பேசினார்.