தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவுப் பரவலே தேசம் காக்கும்! லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் பேச்சு!

9 May 2026, 2:18 am
அறிவுப் பரவலே தேசம் காக்கும்! லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் பேச்சு!
<p><strong>அறிவுப் பரவலே தேசம் காக்கும்! லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் பேச்சு!</strong></p><p>நாமக்கல், மே 8- அறிவைத் தேடுவதும், பெற்ற அறிவை சமூக வளர்ச்சிக்காக பரப்புவதுமே நல் லாட்சிக்கும் உலக அமைதிக்கும் வித்தி டும். அறிவுப் பரவலே தேசத்தைப் பாதுகாக் கும் வலிமை கொண்டது என்று தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராம ராஜ் தெரிவித்தார். நாமக்கல்லில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் வெள்ளியன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்ட, டாக்டர் வி.ராமராஜ் மாணவர்களுக்கு அழகப்பா பல்கலைக் கழகப் பட்டங்களை வழங்கி உரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், கல்வி நிறுவனங்களில் படிக்கும் காலத்தில் அறிவுத் தேடல் என்பது மிக முக்கியமானது. படித்து முடித்த பின்னரும் நல்லவற்றைத் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வரும் தாம் கற்ற அறிவைச் சமூக முன்னேற் றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும். நல்லாட்சியும் அமைதியும் இல்லாத சமூகத் தில் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ இய லாது. உண்மையான ஜனநாயகத்தைப் பாது காக்கும் பொறுப்பு வாக்காளர்களுக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் ’வாக்காளரியலை’ ஒரு பாட மாகப் போதிக்க வேண்டும். வாக்காளரியல் (Voterology) என்பது வெறும் விழிப்புணர்வு மட்டுமல்ல; தேர்தல் நடத்தும் அமைப்புக ளுக்கு நாடாளுமன்றம், நிர்வாகத் துறை மற் றும் நீதித்துறைக்கு இணையான அரசி யல் அந்தஸ்தை (நான்காவது தூண்) வழங்கு வதும், சர்வதேச அளவில் தேர்தல் சட்டங் களை உருவாக்குவதும் இதன் அவசிய மாகும். தேர்தலில் வாக்களிப்பதுடன் வாக்காள ரின் கடமை முடிந்துவிடுவதில்லை. தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஊழல் தடுப்பு அமைப்புகளான லோக்பால், லோக் ஆயுக்தா மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) ஆகியவற்றை முறை யாகப் பயன்படுத்தி நிர்வாகச் சீர்கேடுகளை வெளிக்கொண்டு வரும் பணியை வாக்கா ளர்கள் செய்ய வேண்டும். வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில்முறை வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் கூட்டு வாழ்க்கை என ஐந்தாக வகைப்படுத்தலாம். அறிவியல், மருத்துவம், பொறியியல் என பல துறை படிக்கும் மாணவர்களுக்கும் அடிப்படை அரசியலமைப்பு மற்றும் அரசியல் அறிவி யல் குறித்த அறிவு அவசியம். இளைஞர் கள் அரசியல் அறிவற்றவர்களாக இருப் பது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. திட்டமிட்ட, அறிவியல் பூர்வமான செயல் பாடுகளே வாழ்க்கையில் வெற்றியை தரும், என்றார். இந்த விழாவில் கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.