பணிச்சுமையால் லோகோ செட் தொழிலாளர்கள் பாதிப்பு
20 Nov 2025, 3:46 pm
<p><strong>பணிச்சுமையால் லோகோ செட் தொழிலாளர்கள் பாதிப்பு</strong></p>
<p>டிஆர்இயு ஆர்ப்பாட்டம் ஈரோடு, நவ.20- பணிச்சுமையால் பாதிக்கப்ப டும் தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் டிஆர்இயு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஈரோடு ரயில் நிலையத்தை யொட்டி அமைந்துள்ள லோகோ செட்டில் 214 லோகோக்கள் பரா மரிக்கப்படுகின்றன. இப்பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் 688 ஆகும். இதில் 142 இடங்கள் காலியாக உள்ளன. தெற்கு ரயில் வேயில் மற்றவற்றோடு ஒப்பிடுகை யில் அதிகமான எண்ணிக்கையில் பராமரிப்பு பணிகள் இங்கு தான் நடைபெறுகிறது. இடையிடையே மேலும் பல பணிகள் திணிக்கப்படு கிறது. இங்கு ஏற்படாத கோளாறு களுக்கும், புதிய விதிகளை உரு வாக்கி கடுமையான வேலைப்பளு உயர்த்தப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டிருக்கும் போது, இடை யில் வேறொரு வேலையை செய்ய நிர்பந்திக்கப்படுகிறது. வேலை அவசரம் என நிர்பந்திப்பது தொழி லாளர்களுக்கும், மேற்பார்வையா ளர்களுக்கும் இடையே மனக்கசப் பையும், கருத்து மோதலையும் உரு வாக்குகிறது. இவ்வாறு மன அழுத் தத்திற்கு தள்ளப்பட்டுள்ள தொழி லாளர்களைப் பாதுகாக்க வேண் டும் என வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்பிளாய்ஸ் யூனியன் (டிஆர்இயு) - சிஐடியு சார்பில் வியா ழனன்று பணிமனை முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் கிளைத் தலைவர் பி.யுவ ராஜ் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் எம்.முருகேசன், உத விச்செயலாளர்கள் எஸ்.சுரேஷ் குமார், கே.பிஜு ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். ஓய்வுபெற்றோர் அமைப்பின் சார் பில் சி.முருகேசன் வாழ்த்திப் பேசி னார். திரளானோர் பங்கேற்ற ஆர்ப் பாட்டத்தின் முடிவில், கே.பினு மோன் நன்றி கூறினார்.</p>
