தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தர்க்கவாதியா? குதர்க்கவாதியா?

28 Mar 2026, 4:13 pm
தர்க்கவாதியா? குதர்க்கவாதியா?
<p><strong>தர்க்கவாதியா? குதர்க்கவாதியா?</strong></p> <p>பிறப்பின் அடிப்படையில் பதவி &nbsp;வழங்கும் திமுகவுக்கு &ldquo;பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்&rdquo; என்ற வள்ளுவரின் வரியைப் பயன் படுத்த எந்தத் தகுதியும் கிடையாது என்று பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் ஒரு சிறப்பு நேர்காணலில் கூறியிருக்கிறார். அவரை தமிழக பாஜகவின் முகமாக &nbsp;அறியப்படும் தலைவர்களில் முக்கியமா னவரும் மிகச்சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவருமானவர் என்று தினமணி ஏடு (27.3.26) கூறியிருக்கிறது. வாரிசு அரசியல் பற்றிய கேள்விக்குப் பதில ளிக்கும் போதே ராம.சீனிவாசன் மேற் கண்டவாறு சொல்லியிருக்கிறார். அதனால் பேராசிரியர், மிகச்சிறந்த தர்க்கவாதி என்ற அடைமொழிச் சிறப்புகளுக்கு பொருத்தமில்லாதவ ராகத் தான் அவர் அம்பலப்பட்டி ருக்கிறார். பிறப்பின் அடிப்படையில் பேதம் பார்க்கக் கூடாது. எல்லோரும் சமம் தான். செய்கிற தொழிலின் அடிப்படை யில் தான் சிறப்புகள் சேரும் என்பது தான் திருவள்ளுவரின் குறளின் பொருள். இது பிறப்பு அடிப்படையில், வருணாச்சிரம சாதி பேதங்கள் பார்க்கக் கூடாது; நால்வருண - பிராமண, சத்திரிய, வைசிய,சூத்திர - சாதி பேதங்கள் பார்க்கக் கூடாது என்பதற்கா கவே - சனாதன (அ) தர்மத்துக்கு எதிரா கவே எழுந்த வள்ளுவரின் சமத்துவ முழக்கம். ஆனால் அதையும் திரித்துக் கூறி தனக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதுதான் ஆர்எஸ்எஸ் - இந்துத்துவா கூட்டத் தின் அரசியல். அப்படியே பார்த்தாலும் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்பதே முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி யல்லவா? தற்போது ஒன்றிய அமைச்சர்க ளாக இருப்பவர்கள் , இருந்தவர்கள், மாநில முதல்வர்கள் அவர்களின் வாரி சுகள் என 25 பேர்களின் பட்டியல் - பரிவார்வாத்(PARIVARVAD) , பாஜக குடும்ப அரசியல் (BJP Family Politics) என படங்களுடன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இணைய தளத்தில் காணக் கிடைக்கிறது. அதில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்யா சிந்தியா, துஷ்யந்த்சிங், பூனம் மகாஜன், பேமா காண்டு, தேவேந்திர பட்நாவிஸ், விவேக் தாக்குர், சுவேந்து அதிகாரி, ஜெயந்த் சின்கா, வருண் காந்தி, பர்வேஷ் வர்மா, ரீட்டா பகு குணா, நீரஷ் சேகர், நபாம் ரெபியா, ஹீனா காவிட், தியாகுமாரி, சன்னி தியோல், சங்கீதா சிங் தியோ, பி.ஒய்.ராகவேந்திரா, பிரிதம் முண்டே, பங்கஜ் சிங் வரிசையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட வாரிசு - குடும்ப அரசியல் நடத்துபவர்கள் தான். இது தவிர பிரபலமாகாத பலரும் நாடு முழுவதும் உள்ளனர். ஆனால் பாஜக வாரிசு அரசியல், குடும்ப அரசி யல் செய்யாத கட்சி என்று ரீல் சுற்று கிறார். பேராசிரியர் ராம.சீனிவாசன், மிகச் சிறந்த தர்க்கவாதி அல்ல. குதர்க்க வாதி. வள்ளுவரையும் அவரது குற ளின் பொருளையும் திரித்துக் கூறும் திரிபுவாதி. இவரது திசை திருப்பும் வேலையைக் கண்டு கொள்வோம். நடைபெறும் தேர்தலில் பாஜகவுக்கும் அதன் புளுகிணி வாதங்களுக்கும் தக்க பாடம் புகட்டுவோம். ப.முருகன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.