தொழில்நுட்ப கதிர்
27 Feb 2026, 5:32 pm

கூகுள் மெசேஜஸ் செயலியில் இருப்பிடம் பகிரும் அம்சம்!

கூகுள் மெசேஜஸ் (Google Messa ges) செயலியில் நேரடியாக இருப்பிடத்தை பகிரும் (Location Sharing) புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் செயலி களில் இருப்பது போல கூகுள் மெசேஜஸ் செயலியிலும், தனிநபர் மற்றும் குரூப் சாட்களில், பயனர்கள் தங்கள் இருப்பிடத் தை பகிர முடியும். இந்த அம்சத்தின் மூலம், தங்கள் இருப்பிடம் மற்றவர்களுக்கு எவ்வளவு நேரம் தெரிய வேண்டும் என்பதை பயனர்கள் தாங்களே தீர்மானிக்கலாம். உதாரணமாக, ஒரு மணி நேரம் முதல் காலவரையற்ற நேரம் வரை (Until turned off) இருப்பிடத்தை பகிரும் வகையில் அமைக்கலாம். பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை கருத்தில் கொண்டு, பயனர் எப்போது வேண்டுமானாலும் இருப்பிட பகிர்வை நிறுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நேரடி இருப்பிடத்தை (Live Location) பகிர விரும்பும் பயனர்கள், தங்களின் இருப்பிட பகிர்வு (Google Location Sharing) Settings-க்கு சென்று Upgrade செய்ய வேண்டும். மேலும், பயனர்கள் ஒரு கூகுள் கணக்கின் மூலம் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.

ஜெமினி இலவச பயனர்களுக்கும் புதிய வசதி

ஜெமினி ஏஐ செயலியை இலவசமாக பயன்படுத்தும் பயனர்களுக்கு தங்கள் முந்தைய சாட்களை பயன்படுத்தி பதில்களை வழங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள், புதிய உரையாடலைத் தொடங்கும்போது, முந்தைய உரையாடலை மீண்டும் விளக்கத் தேவையில்லை; ஜெமினி தானாகவே அதை நினைவில் வைத்திருக்கும். இந்த அம்சம் முதலில் Google AI plan சந்தாதாரர்களுக்கே கிடைத்தது; இப்போது உலகளாவிய free users-க்கும் (Europe தவிர) வழங்கப்படுகிறது. கூடுதலாக, ஜெமினி செயலியில் Temporary Chats மற்றும் புதிய privacy controls அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், பயனர்கள் தங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அதிக கட்டுப்பாட்டுடன் நிர்ணயிக்க முடியும்.

இன்ஸ்டாகிராமில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிவிப்பு!

இன்ஸ்டாகிராமில் இளம் வயது பயனர்களுக்கென (teen-users) புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில், குறுகிய காலத்திற்குள் தங்கள் இளம் வயது பயனர்கள் (teen-users) தற்கொலை அல்லது சுய-தீங்கு தொடர்பான சொற்களை திரும்பத் திரும்பத் தேடினால், அவர்களின் பெற்றோருக்கு அதனை தெரிவிக்கும் வகையில் புதிய அம்சம் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. parent supervision-இல் இணைக்கப்பட்டுள்ள teen account-களின் பெற்றோருக்கே இந்த எச்சரிக்கை தகவல்களை இன்ஸ்டாகிராம் அனுப்பும். இந்த எச்சரிக்கை தகவல்கள் இன்ஸ்டாகிராம் செயலியிலும், இ-மெயில், text message அல்லது வாட்ஸ்அப் வழியாக பெற்றோருக்கு அனுப்பப்படும். இன்ஸ்டாகிராம், ஏற்கனவே இத்தகைய ஆபத்தான உள்ளடக்க தேடல்களை தடுக்கிறது; ஆனால் இப்போது, மீண்டும் மீண்டும் தேடல் நடந்தால் பெற்றோர் அறியும்படி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.