திருச்சி விரைவு செய்திகள்
29 Dec 2025, 3:24 pm

குமரி மாவட்டத்திற்கு ஜன.2ல் உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில்,டிச . 29 சுசீந்திரம் கோயில் தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு வரும் 2ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தி ற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு வரும் 02.01.2026 (வெள்ளிக் கிழமை) அன்று கன்னியா குமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவல கங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்றும், இந்த விடுமுறைக்கு ஈடாக 2026 ஜனவரி திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (10.01.2026) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.

வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

காரியாபட்டி, டிச.29- காரியாபட்டி அரசு மருத்துவமனையின் பின்புறம் ஜனுல் ஜாரியா என்பவரின் வீடு உள்ளது. சத்திரபுளிங் குளத்தில் நடைபெற்ற பள்ளிவாசல் நிகழ்ச்சிக்கு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பீரோ வை பார்த்த போது அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. எனவே, ஜனுல் ஜாரியா காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல் ஆய்வாளர் விஜய காண்டீபன் தலைமையிலான தனிப்படையினர் சோதனை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற இடத்தை அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரில் ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து காரியாபட்டி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க குழுக்கூட்டம்

இராமநாதபுரம், டிச.29- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் சனிக்கிழமை அன்று 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்கக் கோரி மனு செய்துள்ள மனுதாரர்களுக்கு வயதை தளர்த்தி மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்குவதற்கான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில், மருத்துவக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சந்திரன், எலும்பு முறிவு மருத்து வர் பெரோஸ்கான், காது மற்றும் மூக்கு, தொண்டை மருத்துவர் அருண்ராஜ், கண் மருத்துவர் காயத்திரி, மனநல மருத்துவர் தீபிகா, சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனி ருந்தனர்.

ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா, புகையிலை பறிமுதல்

விருதுநகர், டிச.29- விருதுநகர் ரயில்வே இருப்புப்பாதை போலீசார் விருதுநகர் வந்த சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கேட்பா ரற்று பை ஒன்று கிடந்தது. அதன் உள்ளே திறந்து பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை கைப்பற்றிய போலீசார் இராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசா ரிடம் ஒப்படைத்தனர். ‎ ‎இதே போல் சிறப்பு குற்றத்தடுப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெங்களூர் - நாகர் கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அதில், கேட்பாரற்று கிடந்த 3 பைகளில் 24.50 கிலோ புகை யிலை மற்றும் கூல்-லிப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

நத்தம் அருகே ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி

நத்தம், டிச.29- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ஊராளி பட்டி மற்றும் கோபால்பட்டி பகுதிகளில் அமைந்துள்ள பூலான்குளத்தில், அழகர்கோவில் வனச்சரகம் சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடை பெற்றது. இந்த கணக்கெடுப்பில் வனச்சரக அலுவலர் சுந்தர வேல் தலைமையில் வனத்துறையினர் கலந்து கொண்டு, குளங்களில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை, அரிய வகை பறவைகள் மற்றும் அவற்றின் இருப்பு குறித்து விரி வான ஆய்வு மேற்கொண்டனர். இந்த கணக்கெடுப்பு பணிகளில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

சின்னாளப்பட்டி, டிச.29- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் உள்ள வண்ணம்பட்டி பல்நோக்கு விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கிராம விளையாட்டு மற்றும் பசுமை மேம்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பா ளர் பிரதீப் குமார் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். இலக்கு மக்கள் திட்ட மேலாளர் வினிஸ் குமார் முன்னிலை வகித்தார்.