தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணிகள் தனியார்மயத்தை ரத்து செய்ய கோரிக்கை உள்ளாட்சித் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மறியல்!

8 Dec 2025, 4:39 pm
தூய்மைப் பணிகள் தனியார்மயத்தை ரத்து செய்ய கோரிக்கை உள்ளாட்சித் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மறியல்!
<p><strong>நீதிமன்ற உத்தரவுப்படி கூலி உயர்வு வழங்கக் கோரி உள்ளாட்சி ஊழியர்கள் சாலை மறியல்: 1100 பேர் கைது</strong></p> <p>திருப்பூர், டிச.8- நீதிமன்ற உத்தரவுப்படி &nbsp;ஊராட்சிகள், பேரூராட்சிகள், நக ராட்சிகள், மாநகராட்சியில் வேலை &nbsp;செய்யும் ஊழியர்களுக்கு கூலி &nbsp;உயர்வு வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் &nbsp;முன்பு திங்களன்று சிஐடியு திருப் பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தி னர் சாலை மறியல் போராட்டத்தில் &nbsp;ஈடுபட்டனர். &nbsp; தூய்மைப் பணியை தனியார் &nbsp;மயமாக்கும் அரசாணைகள் 152, &nbsp;139 யை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சிகள், பேரூராட்சிகள், நக ராட்சிகள், மாநகராட்சியில் வேலை &nbsp;செய்யும் ஊழியர்களுக்கு சிஐடியு தொடுத்த நீதிமன்ற வழக்கில் உத் தரவிட்ட அரசாணை 2(டி)62-ன் படி &nbsp;ஊதியம் வழங்க வேண்டும்.பணி &nbsp;நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து திருப்பூர் &nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் &nbsp;மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் &nbsp;தலைமையில் சாலை மறியல் &nbsp;போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் &nbsp;450 பெண்கள் உள்ளிட்ட 1100 பேர் &nbsp;கைது செய்யப்பட்டு, தனியார் மண் டபத்தில் வைக்கப்பட்டனர். அவர் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அகில இந்திய கட்டுப்பாட் டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ் ணன் நேரில் சந்தித்து வாழ்த்தி பேசி னார். இந்த போராட்டத்தின் ஒருபகுதி யாக திருப்பூர்மாநகராட்சி, 9 பேரூ ராட்சிகள், 5 நகராட்சிகள், 100 க்கும் &nbsp;மேற்பட்ட ஊராட்சிகளில் வேலை &nbsp;செய்யும் தூய்மைப் பணியாளர்கள், &nbsp;தூய்மை காவலர்கள், குடிநீர் பணி யாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 2 &nbsp;ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் &nbsp;அலுவலகத்தில் நடைபெற்ற &nbsp;சாலை மறியல் போராட்டத்தை சிஐ டியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் &nbsp;வாழ்த்தி பேசினார். சிஐடியு விசைத் தறி சம்மேளன மாநில பொதுச்செய லாளர் பி.முத்துசாமி, கட்டுமான சம் மேளன மாநில பொதுச்செயலாளர் டி.குமார், சிஐடியு மாவட்டத் &nbsp;துணைத்தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், பஞ்சாலை சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, சிஐடியு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி &nbsp;உள்ளாட்சித் துறை ஊழியர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் &nbsp;பழனிச்சாமி, உள்ளிட்டோர் பங் கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.