தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணி நிரந்தரம் கோரி உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்

1 hour before
பணி நிரந்தரம் கோரி உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்

கோவை, அக்.5-தமிழகம் முழுவதும் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் பணி நிரந்தரம் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுப் பணியாளர்களை தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு உணவுப்படியாக ரூ.100 வழங்க வேண்டும்.வரவிருக்கும் பண்டிகையை முன்னிட்டு 8.33% தீபாவளி போனஸ் தொகையை வழங்கிட வேண்டும். அனைவருக்கும் ஆண்டிற்கு ஒரு முறை முழுமையான உடல் பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் திங்களன்று மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.நாகராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.ராஜாக்கனி, மாவட்ட பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, துணைச் செயலாளர் என்.ஜாகீர், மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.நிறைவாக சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆர்.அசோக்குமார் நன்றி கூறினார்.

இதேபோன்று மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக வளாகத்திலும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாகராசன், மாவட்ட துணைத்தலைவர் பி.ஆறுமுகம், ஊரக உள்ளாட்சி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சத்யா, மாவட்ட துணைத்தலைவர் சி.குட்டியப்பன் மற்றும் நிர்வாகிகள் விஜயன் உள்ளிட்டோர் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மேட்டூர் நகராட்சி கிளை செ.கருப்பண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவக்குமார், சிஐடியு மேட்டூர் அணல் கிளை கே.சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எல்.சங்கரலிங்கம் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். வடிகால் பணியாளர் சுரேஷ், தூய்மை பணி சிலம்பரசன், குடிநீர் பிரிவு அபிஷேக்ஆகியோர் கண்டன உரையாற்றினர். விவசாயத் தொழிலாளர் சங்கம் மாவட்டப் பொருளாளர் எஸ்.ராஜரத்தினம் வாழ்த்திப்பேசினார். இறுதியாக தூய்மைப் பணியாளர் சரவணன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.