தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

28 Nov 2025, 2:28 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மகளிர் தொழில் துவங்க மானியத்துடன் கடன் உதவி

திருப்பூர், நவ.28-               தொழில்களில் பெண்களின் பங்கு  மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற  நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து  ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை  தொழில் முனைவோராக உயர்த்திடும்  பெருந்திட்டம் ஒன்றுசெயல்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே தெரிவித்துள்ளதாவது, இத்திட்டத் தின் கீழ் பயன்பெற தமிழ் நாட்டை சார்ந்த  18 வயது முதல் 55 வயது வரை உள்ள  மகளிர் மட்டும் விண்ணப்பம் செய்ய லாம். கல்வித் தகுதி தேவையில்லை,  இத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை உள்ள  தொழில்கள் (வியாபாரம், சேவை, மற் றும் உற்பத்தி) 25 சதவித மானியத்துடன்  (அதிகபட்சமாக ரூ.2 லட்சம்) தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பழங்கு டியினர், பட்டியலினத்தவர், திருநங்கை கள் மாற்றுத் திறனாளிகள், கைம்பெண் கள் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ்  உள்ளோர்களுக்கு முன்னுரிமை வழங் கப்படும். நேரடி வேளாண்மை சார்ந்த தொழில்கள், பண்ணை சார்ந்த தொழில் கள், எர்த்முவர்ஸ், கட்டிடம் மட்டும்  கட்டுதல் தவிர்த்து சுற்று சூழலுக்கு  பாதிப்பு ஏற்படுத்தாத எந்த தொழிலை யும் செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்க www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதள முகவரியில் மகளிர்  தொழில் முனை வோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்கள் பெறவும், கூடுதல் வழிகாட்டுதலுக்கும் 89255 34023. 89255  34024, 89255 34025 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆகவே தகுதி யும் ஆர்வமும் உள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்து பயன்  பெறுமாறு தெரிவித்துள்ளார்.

இல்லம் தேடி பொது விநியோகம்

திருப்பூர், நவ.28- திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமான வர் திட்டத்தின் மூலம் 65 வய திற்கு மேற்பட்ட முதியோர்  மற்றும் மாற்றுத்திறனாளிக ளின் இல்லத்திற்கே நேரில்  வந்து டிச.2 டிச.3 ஆகிய தேதி களில் பொது விநியோகத்திட் டம் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட  ஆட்சியர் மனிஷ்  நாரணவரே தெரிவித்துள் ளார்.

பருத்தி ஏலம்

திருப்பூர், நவ.28- அவிநாசி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத் தில் ரூ.3.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு 4,809 கிலோ பருத்தி வரத்து  இருந்தது. இதில், ஆர்.சி.எச்.  ரகப் பருத்தி கிலோ ரூ.70 முதல் ரூ.79.02 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட் சத்து 43ஆயிரத்துக்கு வர்த்த கம் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.