முந்தய பக்கம்

ரூ.148 கோடியில் கடன் ஒப்புதல் வழங்கல்

16 Nov 2025, 3:30 pm
ரூ.148 கோடியில் கடன் ஒப்புதல் வழங்கல்
<p><strong>ரூ.148 கோடியில் கடன் ஒப்புதல் வழங்கல்</strong></p> <p>சேலம், நவ.16- சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 173 பயனாளிக ளுக்கு ரூ.148 கோடிக்கான கடன் ஒப்புதல் கடிதம் வழங் கப்பட்டது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா சேலம் பிராந்தியம், &nbsp;சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனம் (எம்எஸ்எம்இ) இணைந்து மெகா அவுட்ரீச் முகாமை சனியன்று நடத்தின. எம்எஸ்எம்இ கடன் மையத்தின் தலைவர் தன சேகர் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி கலந்துகொண்டு, 173 &nbsp;பயனா ளிகளுக்கு ரூ.148 கோடிக்காக கடன் ஒப்புதல் கடிதத்தை &nbsp;வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், மாவட்ட &nbsp;நிர்வாகமும், வங்கிகளும் இணைந்து செயல்பட்டு அர சாங்கத்தினுடைய திட்டங்கள் இன்னும் முழுமையாக மக்களை சென்றடைய செய்ய வேண்டும், என்றார். யூனி யன் பாங்க் ஆப் இந்தியாவின் சேலம் பிராந்தியத்தின் தலைவர் பி.எம்.செந்தில்குமார், வங்கியினுடைய பல் வேறு திட்டங்களை குறித்து எடுத்துரைத்தார். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சிவகுமார், வங்கி களில் மானியத்துடன் கூடியதான கடனை எவ்வாறு பெறு வது என்று விளக்கினார். தொடர்ந்து, சேலம் வர்த்தக &nbsp;சபையின் நிர்வாகி கார்த்திக் கந்தப்பன், சேலம் குறு &nbsp;சிறு மற்றும் தொழில்கள் சங்கத்தின் தலைவர் மாரியப் பன், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் செந்தில் குமார் பேசினர். இம்முகாமில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். முடி வில், தனிநபர் கடன் பிரிவின் தலைவர் தவக்குமார் நன்றி &nbsp;கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram