முந்தய பக்கம்

பொய் வழக்கிலிருந்து சுமைப்பணி தொழிலாளர்கள் விடுதலை

11 Feb 2026, 5:52 pm
பொய் வழக்கிலிருந்து சுமைப்பணி தொழிலாளர்கள் விடுதலை
<p><strong>பொய் வழக்கிலிருந்து சுமைப்பணி தொழிலாளர்கள் விடுதலை</strong></p> <p><strong>&nbsp;</strong>திருச்சிராப்பள்ளி, பிப்.11 - சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் கள் சங்க திருச்சி மாவட்டச் செயலா ளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக் கையில், &ldquo;திருச்சி காந்தி மார்கெட்டில் 2021 ஆம் ஆண்டு லாரி செட் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டதற்காக முதலாளிகள் ஒன்று சேர்ந்து 50-க்கும் மேற்பட்ட வெளியாட்களை கொண்டு வந்து, வேறு இடத்தில் வைத்து லோடு ஏற்ற முயற்சித்தனர். அதை கேட்கச் சென்ற தோழர்கள் மீது, வணிகர் பேரவையின் அழுத்தத்தின் காரணமாக மார்க்கெட் காவல்நிலையத்தில் 9 பேர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் 13 நாட்கள் அடைத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டு களாக நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடி பொய் வழக்கை முறியடித்து, நீதிமன்றத்தில் 10/2/2026 அன்று விடு தலை பெற்று தந்த, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் வி.ரங்க ராஜன் மற்றும் உரிமைக்காக போராடி சிறை சென்று, வழக்கினை எதிர் கொண்ட அனைத்து தோழர்களுக்கும் &nbsp;பாராட்டுகளை தெரிவித்துக் கொள் கிறோம்&rdquo; என தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram