தீக்கதிர் விரைவு செய்திகள்
5 Jul 2026, 9:40 pm

தீக்கதிர் விரைவு செய்திகள்

எல்என்ஜி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்!

புதுதில்லி, ஜூலை 5- அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்கு வரத்து தடைப்பட்டது. எல்என்ஜி இறக்குமதியும் பாதிக்கப்பட்டது. இதனால், எல்என்ஜி விநியோகத்திற்கு கடந்த மார்ச் மாதம் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டி ருந்தன. தற்போது, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரவ இயற்கை எரிவாயு (LNG) வரத்து சீராகத் தொடங்கியுள்ளதால், எரி வாயு விநியோகம் தொடர் பாக முன்பு விதிக்கப்பட்டி ருந்த அனைத்துக் கட்டுப் பாடுகளையும் ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. இதுதொடர் பான அதிகாரப்பூர்வ அறி விப்பை பெட்ரோலியம் மற் றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கு மழை வாய்ப்பு

சென்னை, ஜூலை 5- வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமி ழகத்தில் ஜூலை 6,7,8 தேதி களில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று டன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழ கத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 11 வரை தமிழகத் திற்கு மழை வாய்ப்பு உள் ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 1.67 லட்சம் பேர் பங்கேற்பு!

சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வின் (டெட்) இரண்டாம் தாள்–2 தேர்வு ஜூலை 5 அன்று மாநி லம் முழுவதும் விறுவிறுப் பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 613 தேர்வு மைய ங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 1 லட் சத்து 67 ஆயிரத்து 743 பேர் பங்கேற்று தேர்வை எழுதி னர். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. மாற்றுத் திற னாளி தேர்வர்களுக்கு கூடுத லாக ஒரு மணி நேரம் வழங் கப்பட்டது.