தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதிய உணவில் பல்லி: 43 பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு

10 Mar 2026, 3:51 pm
மதிய உணவில் பல்லி: 43 பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு
<p><strong>மதிய உணவில் பல்லி: 43 பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு</strong></p> <p>கோவை, மார்ச் 10- கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் வழங்கப் பட்ட மதிய உணவில் பல்லி விழுந்த விவகாரத்தில், உடல்நலம் பாதிக் கப்பட்ட மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு &nbsp;நடத்தினார். கோவை, கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் செவ் வாயன்று மதியம் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 30 &nbsp;ஆண் குழந்தைகள் மற்றும் 13 &nbsp;பெண் குழந்தைகள் என மொத்தம் 43 மாணவர்களுக்கு வாந்தி மற் றும் மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப் பட்ட மாணவர்களை உடனடியாக மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவி னர் மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது மாணவர்கள் அனைவரும் நலமு டன் இருப்பதாகவும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக இரவு 9 &nbsp;மணி வரை அவர்கள் மருத்துவர் களின் கண்காணிப்பில் இருப்பார் கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இச்சம்பவம் குறித்து செய்தியா ளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், &rdquo;உணவில் பல்லி விழுந்ததாக சொல்லப்படும் புகார் குறித்து விசா ரணை நடத்த தனிக்குழு அமைக் கப்பட்டுள்ளது. அங்குள்ள உண வுக்கூடத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். இது போன்ற &nbsp;சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பணியாளர்களின் கவனக்குறைவு காரணமா? என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். இது &nbsp;தொடர்பாக அனைத்துப் பள்ளிக ளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் படும்,&rdquo; எனத் தெரிவித்தார். முன்னதாக, தங்களது பிள்ளை களின் நிலை குறித்து அறிய பள் ளிக்குள் நுழைய முயன்ற பெற் றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத் திற்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. இதனால் பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து, துணை ஆணையர் சரவணன் தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.