சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்: விபத்துகள் எற்படும் அபாயம்
2 Dec 2025, 4:11 pm
<p><strong>சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்: விபத்துகள் எற்படும் அபாயம்</strong></p>
<p>உடுமலை, டிச.2- போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகை யில், நகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பொது மக்கள் தெரிவிக்கை யில், உடுமலை நகரில் போக்குவரத்து அதி கமாக இருக்கும் இராமசாமி நகர், கிரின்பார்க் லேஅவுட் குடியிருப்பு பகுதியில் 15க்கும் மேற் பட்ட கால்நடைகள் சாலைகளில் எவ்வித கட் டுப்பாடுகளும் இல்லாமல் சுற்றி வருகின்றன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக் களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையின் வழியாக தான் உடுமலை அரசு கலைக் கல்லூரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலை யம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் என தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் கட்டுப்பாடு இல்லா மல் கால்நடைகள் உலா வருவதால், தினமும் ஏதாவது ஒரு வகையில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பொது மக்களின் நலனை கருத் தில் கொண்டு சாலைகளில் கால்நடைகள் செல்லாத வகையில், உடுமலை நகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
