தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கால்நடைகள் உயிரிழப்பு: விவசாயிகள் அச்சம்

27 Nov 2025, 3:11 pm
கால்நடைகள் உயிரிழப்பு: விவசாயிகள் அச்சம்
<p>தருமபுரி, நவ.27- தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் மாடு, ஆடு, கோழி &nbsp;போன்ற கால்நடைகள் திடீரென உயி ரிழந்தது குறித்து கால்நடை பராம ரிப்புத்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் வன &nbsp;விலங்குகள் மட்டுமின்றி கால்நடைக ளான ஆடு, மாடு, கோழிகள் திடீ ரென உயிரிழந்து வருவது கடந்த &nbsp;சில மாதங்களாக நிலவி வருகின் றன. அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூா் கிராமத் தில் விவசாயி உதயகுமாருக்கு சொந்தமான பசுமாடு வீட்டருகே கட் டப்பட்டிருந்த நிலையில் இறந்து கிடந்தது. மாட்டின் உடலில் அடையா ளம் தெரியாத விலங்கு கடித்ததற் கான அடையாளம் இருந்தது. இது குறித்த தகவலின்பேரில் வந்த கால் நடை மருத்துவர்கள் மாட்டின் உட லை மீட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மருத்துவ சோதனைக்காக மாட்டின் உடலிலிருந்து மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகை யில், நாய் கடித்ததில் மாடு உயி ரிழந்திருக்கலாம். காயம் சிறிதாக இருந்தாலும் வெறிநோயால் பாதிப் கப்பட்ட நாய் கடித்திருந்தால் ரேபிஸ் &nbsp;நோய் பாதிப்பு காரணமாக மாடு &nbsp;உயிரிழக்க வாய்ப்புள்ளது. இருப்பி னும், அறிக்கை வந்த பின்னரே உறுதி யாக கூறமுடியும், என்றனர். &nbsp;இதேபோன்று, மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதங்க ளாக எங்கள் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்கடித்து உயி ரிழந்துள்ளன. இரு வாரங்களில் &nbsp;மட்டும் 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. &nbsp;இதுபோல உயிரிழக்கும் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப் பீடு வழங்க வேண்டும், என்றனர். இதுகுறித்து கால்நடை பராம ரிப்புத்துறையினர் கூறுகையில், கால்நடைகள் உயிரிழப்பது குறித்த தகவல்களை அண்மையில்தான் கிடைக்கப் பெற்றுள்ளோம். தற் போது உயிரிழந்த மாட்டின் உடலிலி ருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு &nbsp;சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனை அறிக்கை வந்த பின்னரே &nbsp;மாடு உயிரிழந்ததுக்கான காரண மும், அதைக் கடித்த விலங்கு குறித் தும் உறுதியாக தெரியவரும். அதன் பின் சோதனை அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி, &nbsp;இழப்பீடு கிடைக்க பரிந்துரைப் போம், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.